Viral Video: காரை இயக்கும் 4 வயது சிறுவன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
நான்கு வயது சிறுவன் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. சாலைப் பாதுகாப்பு என்பது நகைச்சுவையல்ல என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். பெற்றோர்கள் ஒரு மோசமான முன்மாதிரியாக இருக்கிறார்கள். விதிகள் அனைவருக்கும் பொருந்தும் என பலரும் இணையத்தில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஜனவரி 1, 2026: இன்று சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், நான்கு வயது சிறுவன் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்த நான்கு வயது சிறுவன் தனது தந்தையின் மடியில் அமர்ந்து காரை இயக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகள் இணையவாசிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. சிலர் இதனை ஆச்சரியமாக பார்த்தாலும், பலர் சாலை பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இன்றைய குழந்தைகளுக்கு பல்வேறு வகையான எக்ஸ்போஷர் கிடைப்பதால், அவர்கள் விரைவாக பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால், அதில் சில நல்லதாக இருந்தாலும், சில தேவையற்றதாகவும், ஆபத்தானதாகவும் இருக்கின்றன.
மேலும் படிக்க: புதிதாக பைக் வாங்கப்போறீங்களா?.. அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..
4 வயது சிறுவன் காரை இயக்கும் வைரல் காட்சிகள்:
View this post on Instagram
இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், நான்கு வயது சிறுவன் தனது தந்தையின் மடியில் அமர்ந்து, பேஸ்மென்ட் பார்க்கிங்கில் காரை மிகவும் சுலபமாக இயக்குகிறார். அதாவது, பேஸ்மென்டில் உள்ள பார்க்கிங் பகுதியில் காரை பார்க் செய்ய முயற்சி செய்கிறார். அப்போது, “உனக்கு எங்கே பார்க் செய்ய வேண்டும் என்று தெரியுமா?” என்று தந்தை கேட்க, “ஆம், தெரியும்” என அந்த சிறுவன் பதிலளிக்கிறார்.
பின்னர், “பார்க்கிங் எங்கே செய்ய வேண்டும்? இடதுபுறம் திரும்பு, வலதுபுறம் திரும்பு” என்று தந்தை தொடர்ந்து கூறும் நிலையில், அருகில் அமர்ந்திருக்கும் சிறுவனின் தாய், “அங்கே எனது மெர்சிடிஸ் காரை நிறுத்தியுள்ளேன். கவனமாக இரு, அதைத் இடித்து விடாதே” என்று தனது மகனிடம் செல்லமாக பேசுகிறார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
பெரும் விவாதமாக மாறிய வீடியோ:
இவ்வளவு இளம் வயதிலேயே இவ்வளவு கட்டுப்பாடு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள். இந்தக் குழந்தையை கடவுள் கொடுத்த பரிசு என்று அவர்கள் பாராட்டுகிறார்கள். இதற்கிடையில், சாலைப் பாதுகாப்பு என்பது நகைச்சுவையல்ல என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். பெற்றோர்கள் ஒரு மோசமான முன்மாதிரியாக இருக்கிறார்கள். விதிகள் அனைவருக்கும் பொருந்தும். சிறு குழந்தைகளை வாகனம் ஓட்ட அனுமதிப்பது சட்டவிரோதமானது மற்றும் ஆபத்தானது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.