Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

12 ஆம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்.. அக்கவுடன் பேசுவதை நிறுத்தாததால் வெறிச்செயல்!

12th Student Attacked in Tirunelveli | திருநெல்வேலியில் தனது அக்காவுடன் பழகி வந்த 12 ஆம் வகுப்பு மாணவனை 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கத்தியால் வெட்டியுள்ளார். பலமுறை கூறியும் தனது அக்காவுடன் பழகுவதை கைவிடாத நிலையில், அந்த சிறுவர் இந்த செயலை செய்துள்ளார்.

12 ஆம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்.. அக்கவுடன் பேசுவதை நிறுத்தாததால் வெறிச்செயல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Aug 2025 09:10 AM

திருநெல்வேலி, ஆகஸ்ட் 06 : திருநெல்வேலியில் தனது அக்காவுடன் பழகுவதை நிறுத்தாததால் ஆத்திரமடைந்த 10 ஆம் வகுப்பு மாணவன், 12 ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் வெட்டிய சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது நண்பர்களுடன் மாணவன் வீட்டிற்கு சென்று பேச வேண்டும் என அழைத்து வந்த அவர், தனியாக வந்ததும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த 17 வயது  மாணவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவை அரிவாளால் வெட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், இவருடன் அதே ஊரை சேர்ந்த 17 வயது மாணவி ஒரே வகுப்பில் படித்து வந்துள்ளார். இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக மாணவி வகுப்பு முடிந்து வீட்டிற்கு சென்றாலும் பல மணி நேரம் அந்த மாணவருடன் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : CRPF Officer Jewellery Theft: சிஆர்பிஎஃப் பெண் அதிகாரி வீட்டில் நகை திருட்டு.. வழக்குப்பதிய தாமதம் செய்ததா காவல்துறை..?

இந்த நிலையில், தனது அக்கா சக மாணவருடன் பேசி பழகுவது குறித்து அதே பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவருக்கு தெறிய வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்தது சிறுவன் தனது அக்காவிடம் பழகி வந்த அந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரை அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். ஆனால் இவற்றையெல்லாம் கண்டுக்கொள்ளாத அந்த 12 ஆம் வகுப்பு மாணவர் தொடர்ந்து அந்த மாணவிடம் பழகி வந்துள்ளார்.

திட்டம் தீட்டிய 12 ஆம் வகுப்பு மாணவரை தாக்கிய சிறுவர்கள்

இதன் காரணமாக அந்த 12 ஆம் வகுப்பு மாணவரை பத்தாம் வகுப்பு மாணவர் தாக்க முடிவு செய்துள்ளார். இது குறித்து தனது நண்பர்களிடம் கூறிய அவர், தான் வாசிக்கும் பகுதியில் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திய 17 வயது செய்த மூன்று சிறுவர்களிடம் உதவி கேட்டுள்ளார். அதன்படி மாணவன் வீட்டிற்கு சென்ற ஐந்து சிறுவர்களும் சேர்ந்து தனியாக பேச வேண்டும் என கூறி அவரை வெளியே அழைத்து வந்துள்ளனர். அப்போது ஆல் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு அந்த 10 ஆம் வகுப்பு மாணவர் தாக்கியுள்ளார்.

இதையும் படிங்க : 7 வயது சிறுமியை கடித்து குதறிய பிட்புல் நாய்.. சிறுமிக்கு தீவிர சிகிச்சை!

இதில் மாணவரின் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையில், அவர் அலறி துடித்துள்ளார். இதனால் பயந்துப்போன சிறுவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர் 12 ஆம் வகுப்பு மாணவனை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 சிறுவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.