மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வாழ்வில் மாற்றம்.. ஸ்வபோதினி பள்ளி குறித்து மத்திய அமைச்சர் கருத்து!
ஸ்வபோதினி பள்ளி குறித்து மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறுகையில், "இது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஸ்வபோதினி பள்ளி மற்றும் தொழிற்பயிற்சி மையம் ஆகும். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டுவர இவர்கள் செய்யும் பணிகள் தனித்துவமானவை. நிர்வாகம், மேலாண்மை, அறங்காவலர்கள் மற்றும் இயக்குநருக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகத்தின் சிஎஸ்ஆர் நிதியுதவியுடன் சென்னையில் நடத்தப்படும் ஸ்வபோதினி பள்ளி குறித்து மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறுகையில், “இது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஸ்வபோதினி பள்ளி மற்றும் தொழிற்பயிற்சி மையம் ஆகும். மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டுவர இவர்கள் செய்யும் பணிகள் தனித்துவமானவை. நிர்வாகம், மேலாண்மை, அறங்காவலர்கள் மற்றும் இயக்குநருக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்… பெற்றோரின் ஊக்கத்துடனும் ஆதரவுடனும் அவர்கள் ஒரு குழுவாகச் செயல்படுகிறார்கள். இந்த உன்னதமான முயற்சியின் பயணத்தில், சென்னை துறைமுக ஆணையமும், காமராஜர் துறைமுக நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் நிதி உதவியை வழங்கி வருகின்றன, மேலும் இந்த கட்டிடத்திற்கான இடத்தையும் வழங்கியுள்ளன. இப்படித்தான் அவர்கள் மாற்றங்களைக் கொண்டுவர ஒரு அழகான நிறுவனத்தை உருவாக்கி வருகிறார்கள்…” என்றார்.
