தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சென்னை, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஜனவரி 8 முதல் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 5 ஆம் தேதி மாலை, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, ஜனவரி 6 ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளது. இது, ஜனவரி 7 ஆம் தேதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.