இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மா, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, ரசிகர் ஒருவர் மீண்டும் வட பாவ் வழங்க முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பையில் பயிற்சிக்கு தயாராகிக் கொண்டிருந்த ரோகித் ஷர்மாவிடம், ஒரு ரசிகர் மராத்தியில் “ரோகித் பய்யா, வட பாவ் வேணுமா?” என்று கேட்டார். ஆனால், அதனை சிரித்த முகத்துடன் மறுத்த ரோகித், ரசிகர்களை நோக்கி கையை அசைத்து வேண்டாம்’ எனச் சொன்னார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.