நாளை இந்த 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு
Heavy Rain Alert : தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை கொடுத்துள்ளது. பொங்கலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜனவரி 9 : கடந்த 2025 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை எதிர்பார்க்கப்பட்டதை விட 3 சதவிகிதம் குறைவாக பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருந்தது. அதற்கேற்ப கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கனமழை (Heavy Rain) எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பொங்கலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் ஜனவரி 10, 2026 அன்று நாளை தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாளை இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, ஜனவரி 9, 2026 இன்று மாலை அரியலூர், செங்கல்பட்டு, சென்னை கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 10, 2026 நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




இதையும் படிக்க : கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்…மத்திய உள்துறை அமைச்சகம்-தடயவியல் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!
வானிலை ஆய்வு மையத்தின் எக்ஸ் பதிவு
DAILY WEATHER REPORT FOR TAMILNADU, PUDUCHERRY & KARAIKAL AREAhttps://t.co/LOvDNF1Sqf pic.twitter.com/wiFWItBeKD
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) January 9, 2026
மேலும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 11, 2026 ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு….பட்டியலில் மிஸ் ஆன செங்கோட்டையன்!
மேலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 12 முதல் 15 வரை தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் சென்னை நகரில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.