ஆத்தாடி.. 2 மாதத்திற்கு ரூ.91,993 மின் கட்டணம்.. ஷாக்கான சென்னை குடும்பம்!
Tamil Nadu Electricity Bill : சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு வீட்டிற்கு ரூ.91,993 மின்கட்டணம் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஜூலை மாத கணக்கீட்டிற்கு 8,370 யூனிட் மின் பயன்பாட்டிற்கு , ரூ.91,993 மின் கட்டணம் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

சென்னை, ஆகஸ்ட் 06 : சென்னை அம்பத்தூர் ஒரு வீட்டிற்கு ரூ.91,993 மின் கட்டணம் (EB Bill) வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மாதத்தில் 8,370 யூனிட் பயன்படுத்தியதற்காக ரூ. 91,993 மின் கட்டணம் வந்திருக்கிறது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மின்சார வாரிய ஆணையம் கட்டணத்தை நிர்ணயித்து வசூலித்து வருகிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 7 மாதத்திற்கு ஒருமுறை வீடுகளுக்கு மின்சார கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதோடு தொழில் நிறுவனங்கள் விவசாய நிறுவனங்களுக்கு மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் 100 யூனிட் இலவச இலவச மின்சாரம் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக வீட்டுக்கான மின்சார கட்டணம் 2024 ஜூலை மாதம் உயர்த்தப்பட்டது. 4.8 சதவீதம் மின்கட்டணத்தை மின்வாரியம் உயர்த்தியது . அதன்பிறகு மின்கட்டணம் என்பது உயர்த்தப்படவில்லை.
சமீபத்தில் வணிக வளாகங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. நுகர்வோர்கள் மின்கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்தி வருகின்றனர். இப்படியாக இருக்கும் சூழலில், சென்னையில் அம்பத்தூர் சேர்ந்த குடும்பத்திற்கு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, சென்னை அம்பத்தூர் பகுதி சேர்ந்தவர் நந்தகுமார். இவர் எப்போதும் வழக்கமாக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ரூ.1500 முதல் ரூ. 2000 வரை மின்கட்டணத்தை செலுத்தி வருகிறார். இவரது வீட்டில் வழக்கமாக இருக்கும் பிரிட்ஜ், டிவி , வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் இருக்கின்றன.
Also Read : நாமக்கல்லில் அதிர்ச்சி.. 3 மகள்களை கழுத்து அறுத்து கொன்ற தந்தை.. பகீர் பின்னணி!




2 மாதத்திற்கு ரூ.91,993 மின் கட்டணம்
இதன் அடிப்படையில் நந்தகுமார் வீட்டிற்கு மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், நந்தகுமார் வீட்டிற்கு 2025 ஜூலை மாத கட்டணம் கனவிலும் என்ன முடியாத அளவுக்கு அதிகமாக வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது ஜூலை மாத கணக்கெட்டின் படி, நந்தகுமார் 8,370 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாக தெரிகிறது.
இதற்காக ரூ.91,993 மின்கட்டணம் அவருக்கு வந்துள்ளது. இதனை பார்த்து அந்த குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சடைந்தனர். உடனடியாக இதுகுறித்து சென்னை அண்ணாநகர் மேற்கு 11ஆவது மெயின் ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலக அதிகாரிடம் புகார் அளித்தனர்.
Also Read : சிஆர்பிஎஃப் பெண் அதிகாரி வீட்டில் நகை திருட்டு.. வழக்குப்பதிய தாமதம் செய்ததா காவல்துறை..?
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என நந்தகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் இடம் மின்வாரிய ஊழியர்கள் உறுதியளித்தனர். MRT மீட்டர் ரீடிங் மீண்டும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் ஒரு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை அண்ணாநகர் மேற்கு மின்வாரியத்துறை விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.