Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தொடர் விடுமுறை.. சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Independence Day Special Trains : சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதால், பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மூன்று இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

தொடர் விடுமுறை.. சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!
சிறப்பு ரயில்கள்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 07 Aug 2025 19:48 PM

சென்னை, ஆகஸ்ட் 07 : சுதந்திர தின விடுமுறையை (Independence Day 2025) முன்னிட்டு, சிறப்பு ரயில்கள் (Special Trains) இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுதந்திர தின விடுமுறை, சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வரருகிறது. இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. பல்வேறு மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றன. பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது சிறப்பு ரயில்களையும் ரயில்வே சார்பாக இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தொடர்பு விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் பயணங்களில் வசதிக்கேற்ப சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதாவது சுதந்திர தின விடுமுறையை ஒட்டி தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது இதனை தொடர்ந்து வெள்ளி சனி ஞாயிறு தொடர் விடுமுறை வருகிறது. தொடர் விடுமுறை வருவதால் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி 2025 ஆகஸ்ட் 14, 16, 17ஆம் தேதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புரைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு


அதன்படி, 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை சென்ட்ரல் போத்தனூர் இடையே அதிர்வு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அன்றைய தினம் இரவு 11.50 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8:30 மணிக்கு போத்தனூர் சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு 11‌.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் புறப்படும் ரயில் மறுநாள் காலை 8:20 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடைகிறது.

இந்த ரயில் பெரம்பூர் திருவள்ளூர் காட்பாடி சேலம் மற்றும் திருப்பூரில் நின்று செல்கிறது. மேலும் ஆகஸ்ட் 17ஆம் தேதி நாகர்கோவில் தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அன்றைய தினம் சென்ட்ரலில் இருந்து காலை 11:55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:55 மணிக்கு தாம்பரத்திற்கு சென்றடைகிறது. 

மறு மார்க்கத்தில் ஆகஸ்ட் 18ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. இந்த ரயில் செங்கல்பட்டு பண்ருட்டி திருச்சி திண்டுக்கல் மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. மேலும் ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை எழும்பூர் செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

 அன்றைய தினம் இரவு 9:55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு செங்கோட்டை சென்றடைகிறது. மறு மார்க்கமாக ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு 7 45 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு செ