ஓணம் பண்டிகை.. சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்.. நோட் பண்ணுங்க பயணிகளே!
Special Trains For Onam Festival : ஓணம் பண்டிகை 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னையில் இருந்து கொல்லத்திற்கு மூன்று நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 03 : ஓணம் பண்டிகையை (Onam Festival 2025) முன்னிட்டு, சென்னையில் இருந்து கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து கோயம்புத்தூர் வழியாக கொல்லத்துக்கு (Chennai Central To Kollam Special Train) இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. நாட்டில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. குறைந்த டிக்கெட் செலவு, எளிதாக பயணிக்க முடியும் என்பதால், அனைத்து தரப்பு மக்களும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ரயில் நிலையங்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, பண்டிகை நாட்களில் பயணிகள் கூட்டம் அனைத்து ரயில் நிலையங்களில் அலைமோதும். இதனால், பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறையில் ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஓணம் பண்டிகை 2025 ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.




இதனால், பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். இதனையொட்டி, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்டிரல் – கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. 2025 ஆகஸ்ட் 27, செப்டம்பர் 3, 10ஆம் தேதிகளில் சென்டிரலில் இருநது பிற்பகல் 3.10 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு சொல்லம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4,11ஆம் தேதிகளில் கொல்லம் – சென்னை சென்டிரல் இடையே சிறப்பு ரயல்கள் இயக்கப்படுகிறது.
Also Read : தென் மாவட்ட ரயில்களில் போக்குவரத்து மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
Onam Special Weekly Express Between Dr MGR Chennai Central – Kollam – Dr MGR Chennai Central
Passengers are advised to take note and plan their travel accordingly.#IndianRailways #SouthernRailway #Kollam #Chennai pic.twitter.com/kmnTOm0esi
— Palakkad Division (@DRMPalghat) August 1, 2025
காலை 10.40 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்டிரலுக்கு வந்தடைகிறது. இந்த ரயில்கள் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் வடக்கு, கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிகரா, காயங்குளம், கருநாகப்பள்ளி ஆகிய இடங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும், மங்களூர் சந்திப்பு – கொல்லம் வரையிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி, செப்டம்பர் 1,8ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 11.15 மணிக்கு மங்களூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.20 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.
Also Read : கோவை மக்களே அலர்ட்.. மதுக்கரை சுங்கச்சாவடியில் புதிய கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
மறுமார்க்கமாக, 2025 ஆகஸ்ட் 26, செப்டம்பர் 2,9ஆம் தேதிகளில் மாலை 5.10 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.30 மணிக்கு மங்களூர் சந்திப்பு சென்றடையும். காசர்கோடு, கண்ணங்காடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரா, கோழிக்கோடு, திரூர், ஷோரனூர், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிகரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா ஆகிய இடங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.