AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஊருக்கு போற பிளானா? சிறப்பு ரயில்கள் இயக்கம்.. எங்கெல்லாம் தெரியுமா?

Southern Railway Annouces Special Trains : வார இறுதி நாட்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, சர்லபள்ளி-ராமேஸ்வரம் மற்றும் சென்னை சென்ட்ரல் - போத்தனூர் இடையே 2025 ஜூன் 8ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

ஊருக்கு போற பிளானா? சிறப்பு ரயில்கள் இயக்கம்.. எங்கெல்லாம் தெரியுமா?
ரயில் சேவைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Published: 06 Jun 2025 06:50 AM IST

சென்னை, ஜூன் 06 : வாரஇறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களையொட்டி, பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு பயணிகள் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள். தமிழகத்தில் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்று ரயில் சேவை. ரயில்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்ற மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர். டிக்கெட் விலை குறைவு, போக்குவரத்து நெரிசலின்றி விரைவாக செல்வதற்கு ஏற்ப, ரயில் சேவை உள்ளது. இதனால், மக்கள் பலரும் ரயில் போக்குவரத்தையே தேர்வு செய்கின்றனர். அதற்கு ஏற்ப, ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு சீரான ரயில் சேவையை வழங்கி வருகிறது.

சிறப்பு  ரயில்கள் இயக்கம்

மேலும், பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறையில் சிறப்பு ரயில்களையும் தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது முக்கிய அறிவிப்பை தெற்கு ரயில்வே விடுத்துள்ளது. வார இறுதி நாட்கள், வரவிருக்கும் பண்டிகை நாட்களை யொட்டி, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

அதன்படி, சர்லபள்ளி-ராமேஸ்வரம் மற்றும் சென்னை சென்ட்ரல் – போத்தனூர் இடையே 2025 ஜூன் 8ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி, வண்டி எண் 07695 சார்லப்பள்ளி – ராமேஸ்வரம் இடையே 2025 ஜூன் 11, 18 மற்றும் 25ஆம் தேதிகளில் மாலை 4.45 மணிக்கு சார்லப்பள்ளியில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 11.55 மணிக்கு ராமேஸ்வரத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எண் 07696 ராமேஸ்வரம் – சார்லப்பள்ளி சிறப்பு ரயில் ஜூன் 13, 20 மற்றும் 27ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது.

காலை 9.10 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு சார்லப்பள்ளிக்கு சென்றடைகிறது. காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக ராமேஸ்வரம் சென்றடைகிறது.

எங்கெங்கு தெரியுமா?


இந்த ரயிலில் ஏசி முதல் வகுப்பு, இரண்டு 2ஆம் வகுப்பு ஏசி பெட்டிகள், ஆறு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள், எட்டு ஸ்லீப்பர் வகுப்புகள், நான்கு பொது பெட்டிகள் முன்பதிவுக்கு அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, 2025 ஜூன் 8ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் ரயில் எண் 06027 சென்ட்ரலில் இருந்து 2025 ஜூன் 9ஆம் தேதி காலை 10.14 மணிக்கு புறப்படும் ரயில், அதே நாளில் மாலை 6 மணிக்கு போத்தனூர் சென்றடைகிறது. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us