Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னையில் நாளை முதல் 17 மின்சார ரயில்கள் இயங்காது… காரணம் இதுதான்…

Chennai Suburban Train Cancellation: சென்னை புறநகர் ரயில் சேவையில் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கூடூர்-கவரப்பேட்டை பிரிவில் தண்டவாளம் மற்றும் சிக்னல் பராமரிப்பு பணிகள் காரணமாக, 2025 ஜூன் 5 மற்றும் 7 ஆம் தேதிகளில், 17 புறநகர் ரயில்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யப்படுகின்றன.

சென்னையில் நாளை முதல் 17 மின்சார ரயில்கள் இயங்காது… காரணம் இதுதான்…
சென்னை சென்ட்ரல்–குண்டூர் இடையே பராமரிப்பு பணிImage Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 04 Jun 2025 20:00 PM

சென்னை ஜூன் 04: சென்னையிலுள்ள (Chennai) மக்களின் முக்கிய போக்குவரத்து முறை எனக் கருதப்படும் மின்சார ரயில் (Electric Train Service) சேவை, தினசரி லட்சக்கணக்கான பயணிகளை சேவையாற்றி வருகிறது. குறிப்பாக, சென்னை சென்ட்ரல் மற்றும் வடசென்னை பகுதிகளை இணைக்கும் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின்சார ரயில்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்நிலையில், 2025 ஜூன் 5 மற்றும் ஜூன் 7 ஆகிய தேதிகளில் கூடூர்–கவரப்பேட்டை பிரிவில் தண்டவாளம் மற்றும் சிக்னல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதன் காரணமாக, அந்த வழித்தடத்தில் இயங்கும் பல புறநகர் ரயில்கள் முழுமையாக அல்லது பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்படவுள்ளன. எனவே, பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை முறையாக அமைத்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை சென்ட்ரல்–குண்டூர் இடையே பராமரிப்பு பணி

சென்னை சென்ட்ரல்–குண்டூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், 2025 ஜூன் 5 மற்றும் 7 ஆம் தேதிகளில் கவரப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே 17 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதில் சென்னை கடற்கரை, மூர் மார்க்கெட், சூலூர்பேட்டை, நெல்லூர் உள்ளிட்ட வழித்தடங்கள் பாதிக்கப்படுகின்றன.

சில ரயில்கள் முழுமையாக, சில ரயில்கள் பகுதி நேரம் மட்டுமே ரத்து செய்யப்படுகின்றன. செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய இடங்களிலிருந்து செல்லும் சில ரயில்களும் இதில் சேரும். பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 மின்சார ரயில்கள் இயங்காது

பராமரிப்பு பணிக்காக புறநகர் ரயில்கள் ரத்து அறிவிப்பு

சென்னை சென்ட்ரல்–குண்டூர் ரயில் பாதையில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, 2025 ஜூன் 5 மற்றும் 2025 ஜூன் 7 தேதிகளில் கவரப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே 17 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள் – விவரங்கள்

2025 ஜூன் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில், சென்னை கடற்கரை–கும்மிடிப்பூண்டி, மூர் மார்க்கெட்–சூலூர்பேட்டை, மூர் மார்க்கெட்–கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை–நெல்லூர், ஆவடி–மூர் மார்க்கெட், கும்மிடிப்பூண்டி–சென்னை கடற்கரை, நெல்லூர்–சூலூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் 17 புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

பகுதி நேர ரத்து செய்யப்பட்ட ரயில்கள்

2025 ஜூன் 5 மற்றும் ஜூன் 7 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு–கும்மிடிப்பூண்டி மற்றும் தாம்பரம்–கும்மிடிப்பூண்டி இடையே இயங்கும் ரயில்கள், கும்மிடிப்பூண்டி–சென்னை கடற்கரை இடையே பகுதி நேரத்தில் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிலாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

பயணிகளுக்கு ஏதுவாக, ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.