Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IRCTC Update : முன்பதிவு செய்த டிக்கெட்டின் பெயரை மாற்ற முடியுமா? ஆன்லைனில் எப்படி மாற்றுவது?

IRCTC Update : இந்தியாவில் ரயில் போக்குவரத்தை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ரயிலில் டிக்கெட் எடுப்பது மிகப்பெரும் சாதனையாக இருக்கிறது. குறிப்பாக முன்பதிவு செய்வதற்கு சில மணி நேர அவகாசமே இருப்பதால் டிக்கெட் எடுக்கும் அவசரத்தில் பெயர் உள்ளிட்ட விவரங்களை மாற்றினால் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும். இந்த பதிவில் முன்பதிவு செய்த டிக்கெட்டில் பெயரை எளிதில் மாற்றுவது எப்படி என பார்க்கலாம்.

IRCTC Update : முன்பதிவு செய்த டிக்கெட்டின் பெயரை மாற்ற முடியுமா? ஆன்லைனில் எப்படி மாற்றுவது?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 20 Jun 2025 19:08 PM

இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் (Train) மூலம் பயணம் செய்கிறார்கள். நீண்ட நேர பயணங்களுக்கு ரயில் போக்குவரத்து மிகவும் வசதியானதாக இருக்கிறது. அதிகம் பேர் பயன்படுத்துவதால் ரயில்களில் டிக்கெட் (Train Ticket) எடுப்பது அல்லது முன் பதிவு செய்வது மிகப் பெரிய சாதனைகளில் ஒன்றாக இருக்கிறது. அப்படியே சரியான நேரத்தில் முன் பதிவு (Tatkal) செய்தாலும் நாம் அளிக்கும் விவரங்களில் ஏதேனும் தவறு செய்தால் பெரும் சிக்கலை சந்திக்க வாய்ப்பிருக்கிறது.  குறிப்பாக பயணிகள் முன்பு செய்யும் போது தவறான பெயர் அல்லது எழுத்துப்பிழையுடன் கூடிய பெயரை அளிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் முன்பதிவு செய்த டிக்கெட்டில் பெயர் உள்ளிட்ட விவரங்களை மாற்றுவது அவ்வளவு எளிதில்லை. இதற்கான தீர்வாக, IRCTC இப்போது பயணியின் பெயரை ஆன்லைனில் மாற்றும் வசதியை எளிதாக்கியுள்ளது.

IRCTC ஆன்லைன் மூலம் பெயர் மாற்றும் நடைமுறை

  1. முதலில் உங்கள் IRCTC  கணக்கில் லாகின் செய்து நுழையவும்.

  2. பின்னர் டேஷ்போர்டில் “Change Boarding Point and Passenger Name Request” என்ற ஆப்சனைத் தேர்வு செய்யவும்.

  3. அந்தப் படிவத்தை டவுன்லோட் செய்து, சரியாக நிரப்பி மீண்டும் அப்லோட் செய்யவும்.

  4. உங்கள் கோரிக்கையை IRCTC பரிசீலித்து, பெயர் மாற்றம் செயல்படுத்தப்படும்.

ரயில் நிலையத்தில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

  • ரயில்வே டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.

  • பயணத்திற்கு குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பு அருகில் உள்ள ரயில்வே நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்டருக்கு செல்லவும்.

  • பெயர் மாற்ற வேண்டிய பயணியின் அடையாள ஆவணத்தின் அசல் மற்றும் நகலை கொண்டு செல்லவும்.

  • அதிகாரியை தொடர்பு கொண்டு பெயர் மாற்றம் அல்லது குடும்ப உறுப்பினருக்கு டிக்கெட் மாற்றம் கோரிக்கையை செய்யவும். அவர் ஆவணங்களை சரிபார்த்து உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார்.


இந்த புதிய வசதி தவறாக குறிப்பிட்ட பெயரை மாற்றுவதற்கு மட்டுமல்ல,  தவிர்க்க முடியாத காரணங்களால் பயணிக்க முடியாத பயணியின் டிக்கெட்டை அவரது குடும்ப உறுப்பினருக்கு மாற்றிக் கொடுக்க அனுமதிக்கிறது. அதுவும், ஒரு டிக்கெட்டுக்கு ஒரே முறை மட்டுமே இந்த பெயர் மாற்றத்தை செய்ய முடியும் என்பதால், கவனமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் இந்த ஐஆர்சிடிசியின் இந்த புதிய வசதி மூலம், பயணிகள் இனி பெயர் தவறுகளுக்காக கவலைப்பட தேவையில்லை. ஆன்லைன் மூலமாகவோ அல்லது ரயில் நிலையங்களுக்கு நேரில் சென்றோ எளிதில் பெயரை மாற்றிக்கொள்ள முடியும். இது பயணிகளை மேலும் வசதியாக, சிரமமின்றி பயணிக்க உதவுகிறது.