ஆதாரில் இந்த தேதி வரை மட்டுமே இலவசமாக முகவரியை மாற்றலாம் – ஆன்லைனில் எப்படி செய்வது?
Free Aadhaar Address Update : அரசின் பல்வேறு சேவைகளுக்கு ஆதார் மிக அவசியம். குறிப்பாக ஆதாரில் உள்ள அனைத்து பெயர், தொலைபேசி எண், முகவரி போன்ற பல முக்கிய தகவல்கள் உடனுக்குடன் அப்டேட் செய்யப்பட்டிருப்பது மிகவும் அவசியம். இந்த நிலையில் ஆதாரில் முகவரி உள்ளிட்ட தகவல்களை குறிப்பிட்ட தேதி வரை மட்டுமே இலவசமாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் குடிமக்களுக்கு அடையாள ஆவணமாக பயன்படும் ஆதார் கார்டில் லேட்டஸ்ட் தகவல்கள் அப்டேட் செய்யப்பட்டிருப்பது இருப்பது மிக முக்கியம். இதற்காக, யூனிக் ஐடென்டிஃபிகேஷன் ஆத்தாரிட்டி ஆஃப் இந்தியா (UIDAI) தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆதார் முகவரி உள்ளிட்ட தகவல்களை இலவசமாக அப்டேட் செய்யும் கடைசி தேதி ஜூன் 14, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு அப்டேட் செய்ய ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். UIDAI-யின் விதிமுறைப்படி, ஆதார் கார்டில் உள்ள முகவரியை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இது, உங்கள் அடையாள விவரங்களை சரியாக வைத்திருக்கவும், சேவைகள் பெறும் போது பிரச்சனை ஏற்படாமல் இருக்கவும் உதவும்.
ஆதார் முகவரியை ஆன்லைனில் எப்படி மாற்றுவது?
-
https://myaadhaar.uidai.gov.in என்ற மை ஆதார் போர்டலுக்கு செல்லவும்.
-
உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிடவும்.
இதையும் படியுங்கள்ஆதார் கார்டை மிஸ் பண்ணிட்டீங்களா? ஆன்லைனில் டூப்ளிகேட் ஆதார் கார்டு பெறுவது எப்படி?Aadhaar Card : ஆதாரில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!குழந்தைகளுக்கு 5 மற்றும் 15 வயதில் ஆதார் அப்டேட் அவசியம் – காரணம் என்ன தெரியுமா?Aadhaar Card : இன்னும் ஒரு மாதம் மட்டும்தான் உள்ளது.. அதுக்குள்ள ஆதார் கார்டில் இத பண்ணிடுங்க! -
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை பயன்படுத்தி உள்ளே நுழையவும்.
-
“Document Update” என்பதை கிளிக் செய்யவும்.
-
தேவையான ஆவணங்களை JPEG, PNG அல்லது PDF வடிவில் (2MBக்கு குறைவாக) பதிவேற்றவும்.
-
“Submit” பட்டனை அழுத்தவும்.
-
நீங்கள் ஒரு 14 இலக்க Update Request Number (URN) ஐ பெறுவீர்கள். இதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை கண்காணிக்கலாம்.
முகவரி மாற்றத்துக்கு தேவைப்படும் ஆவணங்கள்?
-
அடையாள ஆவணங்களுக்கு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, புகைப்படத்துடன் கூடிய பள்ளி டிசி, அரசு வழங்கிய அடையாள அட்டைகள் ஆகியவற்ற சமர்பிக்கலாம். முகவரி மாற்றுவதற்கு கடந்த 3 மாதங்களுக்கு செலுத்திய மின்சார, தொலைபேசி, காஸ், தண்ணீர் பில் ஆகியவற்றை சமர்பிக்கலாம். மேலும் வங்கி அல்லது தபால் அலுவலக பாஸ்புக், வீட்டு வாடகை ஒப்பந்தம், சொத்து வரி ரசீது ஆகியவற்றையும் சமர்பிக்கலாம். முகவரியுடன் சேர்த்து பிற தகவல்களை மாற்ற, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், மற்ற அரசு அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டைகள் ஆகியவற்றை சமர்பித்து மாற்றிக்கொள்ளலாம்.
ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம் மற்றும் முகவரி ஆகிய முக்கிய தகவல்கள் இடம்பெறும். இது பல்வேறு அரசு திட்டங்களில் பயனடையவும், வருமான வரி தாக்கல், வங்கிக் கணக்கு ஓபன் செய்ய, உதவித் தொகைகள் பெற போன்ற பல சேவைகளுக்கு அடையாள ஆதாரமாக பயன்படுகிறது.
இன்னும் அப்டேட் செய்யாமல் இருப்பவர்களுக்கான இது ஒரு முக்கியமான வாய்ப்பு. வருகிற ஜூன் 14, 2025க்கு முன்னர் இணையம் மூலமாக இலவசமாக அப்டேட் செய்வது நல்லது. இல்லையெனில் பின்னர் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். தகவல் உதவி தேவைப்பட்டால், UIDAI அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிடலாம் அல்லது அருகிலுள்ள ஆதார் சேவை மையத்துடன் தொடர்பு கொள்ளலாம்.