Aadhaar Card : இன்னும் ஒரு மாதம் மட்டும்தான் உள்ளது.. அதுக்குள்ள ஆதார் கார்டில் இத பண்ணிடுங்க!
Users can update Aadhaar Card before June 14, 2025 | இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கும் ஆதார் கார்டு இந்தியர்களின் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த நிலையில், ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் மிக சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது.

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆதார் இந்திய குடிமக்களின் அடையாள அட்டையாகவே விளங்குகிறது. ஆதார் இத்தகைய முக்கியத்துவம் கொண்ட ஆவணமாக உள்ள நிலையில், அது இல்லை என்றால் பல வேலைகளை செய்து முடிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே இந்தியாவில் உள்ள அனைவரும் ஆதார் கார்டை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஆதார் கார்டை வைத்திருப்பதை போலவே அதில் இருக்கும் விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமாக உள்ளது. ஆதாரில் உள்ள விவரங்கள் பிழையாகவோ அல்லது வேறு ஆவணங்களில் இருந்து மாறுபட்டோ இருக்கும் பட்சத்தில் அது பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
ஆதார் கார்டில் இடம்பெறும் முக்கிய தகவல்கள்
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India) இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டையை வழங்குகிறது. இந்த ஆதார் அட்டையில் ஒரு நபரின் பெயர், வயது, பாலினம், முகவரி, கைரேகை, கண்ரேகை உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இந்த தகவல்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் ஆதார் கார்டை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் செயல்களை செய்ய முடியாமல் போய்விடும். இதன் காரணமாக தான் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டு விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று இந்திய தனித்துவ ஆணையம் கூறுகிறது.
இலவச ஆதார் அப்டேட் – ஜூன் 14 தான் கடைசி நாள்
ஆதார் கார்டில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுமதி வழங்குகிறது. இந்த நிலையில், ஆதார் கார்டு விவரங்களை அப்டேட் செய்ய ஜூன் 14, 2025 கடைசி தேதி என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது. ஆதார் கார்டில் உள்ள விவரங்களை அப்டேட் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், ஜூன் 14, 2025 வரை இலவசமாக அப்டேட் செய்துக்கொள்ளலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது. எனவே, ஆதார் கர்டில் விவரங்களை அப்டேட் செய்ய விரும்பும் நபர்கள் இந்த தேதிக்குள் அப்டேட் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இல்லையென்றால் ரூ.50 கட்டணம் செலுத்தி ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.