EPFO : உங்கள் UAN எண்ணை மறந்துவிட்டீர்களா? எப்படி திரும்ப பெறுவது?
Step-by-Step UAN Recovery : பெரும்பாலான பணியாளர்கள் தங்களது பிஎஃப் கணக்குகளை அடிக்கடி பரிசோதிப்பதில்லை. இதன் காரணமாக அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட யுஏஎன் எண்ணை மறந்து விடுகிறார்கள். ஆனால் அவசர தேவைகளின் போது யுஏஎன் தெரியாததால் சிக்கல் ஏற்படுகிறது. இந்த கட்டுரையில் எளிய முறையில் யுஏஎன் எண்ணை எப்படி மீட்பது என்பது குறித்து பார்க்கலாம்.

ஊதியத் தொகைத் திட்டத்தில் (EPF) உள்ள பணத்தை பராமரிக்கவும், முக்கிய விவரங்களை புதுப்பிக்கவும், பணி மாற்றத்தின் போது பணத்தை மாற்றவும், அவசர தேவைகளின் போது பணம் எடுக்கவும் பயன்படும் எளிமையான 12 இலக்க அடையாள எண் தான் யூனிவர்சல் அகௌண்ட் நம்பர் எனப்படும் யுஏஎன். யுஏஎஎன் என்பது ஊதியத் தொகைத் திட்டத்தில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் பணியாளர் வைப்பு நிதி ஆணையம் வழங்கும் ஒரு 12 இலக்க எண் ஆகும். ஒரே நபருக்கு பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்தாலும், அவருடைய அனைத்து பிஎஃப் கணக்குகளும் ஒரே யுஏஎன் (UAN) எண் மூலம் இணைக்கப்படும். இது இல்லாமல் உங்கள் பிஎஃப் கணக்கை அணுக முடியாது. ஆனால் சில சமயம் யுஏஎன் எண்ணை நாம் மறந்து விடலாம். இப்போது இதனை மீட்டெடுக்க பணியாளர் வைப்பு நிதி ஆணையம் (EPFO) ஒரு எளிமையான ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பிசினஸ் ஸ்டேண்டர்டு இணையதளத்தில் வெளியான கட்டுரையின் படி யஏஎன் தொலைந்து விட்டால் அதனை எப்படி மீட்பது என்பது குறித்து பார்க்கலாம்.
UAN எண்ணை ஆன்லைனில் மீட்டெடுப்பது எப்படி?
- https://www.epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- ‘Services’ பகுதியில் ‘For Employees’ என்பதனை தேர்ந்தெடுக்கவும்.
- அதில் ‘Know your UAN’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் PF-க்கு இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- பெயர், பிறந்த தேதி மற்றும் CAPTCHA குறியீட்டை உள்ளிடவும்.
- ‘Request OTP’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் மொபைலுக்கு வரும் One-Time Password (OTP)ஐ உள்ளிட்டு உறுதிப்படுத்தவும்.
- உங்கள் தகவலை உறுதிப்படுத்த ஒரு ஆவணத்தை தேர்வு செய்யவும் (PAN / Aadhaar / Member ID)
- தேர்ந்தெடுத்த ஆவண விவரங்களை சரியாக சமர்பிக்கவும்.
- உங்கள் விவரங்கள் EPFO பதிவுகளுடன் பொருந்தினால், உங்கள் UAN எண் திரையில் காட்டப்படும்.
- உங்கள் மொபைலுக்கும் SMS மூலம் தகவல் வரும்.
முக்கிய குறிப்புகள்:
-
உங்கள் PF கணக்குடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்
-
உங்கள் விவரங்கள் பொருந்தவில்லை என்றால், உங்கள் நிறுவன எச்ஆர்-ஐ அல்லது அருகிலுள்ள இபிஎஃப்ஓ அலுவலரை தொடர்பு கொள்ளவும்
இதையும் படியுங்கள்EPFO: யூஏஎன் ஆக்டிவேட் செய்ய கடைசித் தேதி நீட்டிப்பு – எப்படி ஆக்டிவேட் செய்வது? அதன் நன்மைகள் என்ன?EPFO : விரைவில் அமலுக்கு வரும் இபிஎஃப்ஓ 3.0.. இனி எல்லாமே ஈஸி தான்!EPFO : ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் புதிய அறிவிப்பு.. இனி இது ஈஸி!EPFO புதிய விதிமுறைகள் – பணியாளர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய 4 தகவல்கள் -
மீண்டும் UAN எண்ணை மறக்காமல் பாதுகாத்து வைத்துக்கொள்ளவும்
இபிஎஃப்ஓ இன் இந்த புதிய முயற்சி பயனாளர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.. சிக்கலின்றி பிஎஃப் கணக்கை பராமரிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காரணம் பொதுவாக பணியாளர்கள் அடிக்கடி தங்கள் பிஎஃப் கணக்குகளை காரணமின்றி பார்ப்பதில்லை. இதனால் பெரும்பாலானோர் தங்களது யுஏஎன் எண்ணை மறந்து விடுகிறார்கள். இது அவசர தேவைகளின் போது அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் மேற்சொன்ன முறையில் அவர்கள் தங்கள் யுஏன் எண்ணை மீட்டெடுக்கலாம்.