Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

EPFO : ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் புதிய அறிவிப்பு.. இனி இது ஈஸி!

Simplified PF Transfers and Claims | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் உறுப்பினர்களுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பிஎஃப் கிளைம் மற்றும் மாற்றத்தில் சில சிக்கல்கள் நீடித்து வந்த நிலையில், அதனை சரிசெய்யும் வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

EPFO : ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் புதிய அறிவிப்பு.. இனி இது ஈஸி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 30 May 2025 22:40 PM

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரு சிறப்பு அம்சமாக உள்ளது தான் இந்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization). இதன் மூலம் ஊழியர்களுக்கு ஏராளமான சிறப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. ஊழியர்களின் பணி காலம் மட்டுமன்றி அவர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகும், ஊழியர்களின் மறைவுக்கு பிறகும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பயன்பெறும் வகையிலும் பல சிறப்பு அம்சங்களை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் வழங்கி வருகிறது. இந்த நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ஊழியர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒரு அசத்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புதிய விதிகளை வெளியிட்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம்

பிஎஃப் க்ளெய்ம் மற்றும் மாற்றம் குறித்த சில புதிய விதிமுறைகளை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பிஎஃப் கணக்கை ஒரு அலுவலகத்தில் இருந்து மற்றொரு அலுவலகத்திற்கு எளிதாக மாற்றும் வகையில் இந்த விதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகள் தொடர்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இபிஎஃப்ஓ புதிய விதிகள் – சுற்றரிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?

இந்த புதிய விதிகள் குறித்து ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றரிக்கையில் கூறியுள்ளதாவது, பணியின்போது சிறு முரண்பாடுகள் காரணமாக சேமிப்புகளை அனுகுவதில் சிரமத்தை எதிர்க்கொள்ளும் பணியாளர்களின் க்ளெய்ம்கள் ரிஜக்ட் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அந்த உள்ளூர் அலுவலகங்களில் சேவை காலம் தொடர்பாக உள்ள சிறு முரண்பாடுகள் காரணமாகவே டிரான்ஸ்ஃபர் க்ளெய்ம் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த சிக்கல்கள் சரிசெய்யப்பட்ட பொதுமக்களுக்கு தடையற்ற சேவை வழங்கப்படும் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இபிஎஃப்ஓ பயனர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.