EPFO: யூஏஎன் ஆக்டிவேட் செய்ய கடைசித் தேதி நீட்டிப்பு – எப்படி ஆக்டிவேட் செய்வது? அதன் நன்மைகள் என்ன?
EPFO Update : பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (EPFO) யுஏஎன் ஆக்டிவேட் செய்வதற்கான காலக்கெடுவை ஜூன் 30, 2025 அன்று வரை நீடித்துள்ளது. இந்த கட்டுரையில் யுஏஎன் ஆக்டிவேட் செய்வதற்கான நன்மைகள் குறித்தும் அதனை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பது குறித்தும் பார்க்கலாம்.

கடந்த 2024 ஆம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு தொடர்பான ஊக்கத் திட்டமான Employment Linked Incentive (ELI) திட்டத்தில் பண பலன்களைப் பெற, ஊழியர்கள் தங்களின் யூஏஎன் எண்ணை (UAN) ஆக்டிவேட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது யுஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்ய காலக்கெடு ஜூன் 30, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. யஏஎன் என்பது Universal Account Number எனப்படும், இது ஒரு 12 இலக்க எண்ணாகும். இந்த எண் இபிஎஃப்ஓ (EPFO) மூலம், மாத சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரே யூஏஎன் மூலம், பல நிறுவனங்களில் பெற்ற பிஎஃப் கணக்குகளை ஒருங்கிணைத்து பராமரிக்கலாம். இதன் மூலம் பிஎஃப் நிலுவைகள், பணம் எடுத்தல் உள்ளிட்ட சேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் நிர்வகிக்கலாம். இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, யுஏஎன் செயல்படுத்தவும் மற்றும் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கும் கடைசித் தேதியானது ஜூன் 30, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் பலமுறை இந்த தேதி நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யூஏஎன்-ஐ ஆக்டிவேட் செய்வது எப்படி?
ஆதார் ஓடிபி வழியாக யூஏஎன் செயல்படுத்தலாம். அதற்கு




-
இபிஎஃப்ஓ இணையதளமான https://unifiedportal-mem.epfindia.gov.in என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
-
Important Links பகுதியில் உள்ள Activate UAN என்பதை கிளிக் செய்யவும்
-
உங்கள் UAN, ஆதார் எண், பெயர், பிறந்த தேதி, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவிடவும்.
-
மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்யவும்
-
Get Authorization PIN என்பதைக் கிளிக் செய்யவும்
-
உங்கள் மொபைலில் வரும் OTP ஐ உள்ளிடவும்
- OTP சரிபார்க்கப்பட்ட பிறகு, உங்கள் யூஏஎன் செயல்படுத்தப்படும். செயல்படுத்தப்பட்டதும், உங்களது மொபைலுக்கு ஒரு password அனுப்பப்படும்.
யுஏஎன் ஆக்டிவேட் செய்வது குறித்து இபிஎஃப்ஓ விளக்கம்
UAN activation is necessary to access various services related to your EPF account.
Activate your UAN in just 6 simple steps to avail these services without any hassle.#EPFOwithYou #EPFOmembers #HumHainNaa #EPFO #ईपीएफओ #EPF #ईपीएफ #EPS #ईपीएस #पीएफ #UAN pic.twitter.com/GUTBsB8a6n— EPFO (@socialepfo) May 21, 2025
யூஏஎன் ஆக்டிவேட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
-
பிஎஃப் பாஸ்புக் பார்த்து நம் கணக்கு விரவங்களை தெரிந்துகொள்ளலாம்.
-
ஆன்லைனில் பணம் எடுக்கலாம்.
-
இபிஎஃப்ஓவின் அனைத்து டிஜிட்டல் சேவைகளும் பயன்படுத்தலாம்
-
தனிப்பட்ட விவரங்களை புதுப்பிக்கலாம்
-
பணம் எடுப்பதற்கான விவரங்களை பார்க்கலாம்.
ஏன் இதை கட்டாயம் செய்ய வேண்டும்?
ELI திட்டத்தின் பண நலன்கள் பெற யூஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்து, ஆதாருடன் வங்கிக் கணக்கை இணைத்திருக்க வேண்டும்.
2024 ஆண்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த இந்த இஎல்ஐ திட்டம் மூன்று வகையாக உள்ளது. அதில் ELI A, ELI B, ELI C ஆகிய மூன்று திட்டங்களை அறிவித்திருந்தார். இந்த திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெறும் ஊழியர்களுக்கு அரசு நிதி ஊக்கம் வழங்குகிறது. இதனை பெற, பணி அமர்த்தப்படும் ஊழியர் யுஏஎண் ஆக்டிவேட்டாக இருக்க வேண்டும்.
உங்கள் பிஎஃப் கணக்கு தொடர்பான அனைத்து நன்மைகளையும் பெறவும், இஎல்ஐ திட்டத்தின் கீழ் உங்களுக்கான பண உதவிகளை பெறவும், ஜூன் 30, 2025க்குள் உங்கள் யூஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்து, வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து விடுவது மத்திய அரசின் பலன்களை பெற எளிதாக இருக்கும்.