Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

EFPO : இணைய வசதியே இல்லாமல் பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்ளலாம்.. இது தெரியாம போச்சே!

Check EPFO PF Balance Offline | ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் இருப்பை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் இபிஎஃப்ஓவின் இணையதளத்திற்கு சென்றோ அல்லது உமாங் செயலியிலோ தான் தெரிந்துக்கொள்ள முடியும் என பலரும் நினைக்கின்றனர். ஆனால், இணைய வசதி இல்லாமல் மொபைல் எண் மூலமாகவே பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்ளலாம்.

EFPO : இணைய வசதியே இல்லாமல் பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்ளலாம்.. இது தெரியாம போச்சே!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 22 May 2025 16:54 PM

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) மூலம் இந்தியாவில் பண்கியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் உறுப்பினர்களின் பெயரில் வரவு வைக்கப்படும் பணத்தை இணையதளம், செயலி உள்ளிட்டவற்றின் மூலம் மிக எளிதாக தெரிந்துக்கொள்ளலாம். ஆனால், இந்த முறைகளை பயன்படுத்தி பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு இணைய வசதி வேண்டும். இந்த நிலையில், இணைய வசதி இலலாமலே பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஊழியர்களுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம்

இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்கும் ஒரு அமைப்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பல்வேறு சிறப்பு அம்சங்களை பெறுகின்றனர். குறிப்பாக, ஊழியர்களின் பெயரில் பிடிக்கப்படும் பிஎஃப் தொகை அவர்களின் நிதி பற்றாக்குறை சமாளிக்க பெருமளவில் உதவுகிறது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் உறுப்பினர்களாக உள்ள ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு அந்த கணக்கில் அவர்களது மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை பிஎப் கணக்கில் வரவு வைக்கப்படுவதுடன் அதற்கு வட்டியும் வழங்கப்படும். வட்டியுடன் கூடிய இந்த பி எஃப் பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளத்திற்கோ அல்லது உமாங் செயலிக்கோ செல்ல வேண்டும் என்று பெரும்பாலான உறுப்பினர்கள் நினைக்கின்றனர். இந்த நிலையில், பிஎஃப் தொகையை இணைய சேவை இல்லாமல் மிக சுலபமாக தெரிந்துக்கொள்ளும் வழியும் உள்ளது.

இணைய வசதி இல்லாமல் பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்வது எப்படி?

பிஎஃப் இருப்பை இணைய வசதி இல்லாமல் தெரிந்துக்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று குறுஞ்செய்தி மூலம் தெரிந்துக்கொள்வது, மற்றொன்று மிஸ்டு கால் மூலம் தெரிந்துக்கொள்வது.

குறுஞ்செய்தி மூலம் தெரிந்துக்கொள்வது

பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்ள 7738299899 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். அதாவது, இந்த எண்ணுக்கு EPFOHO UAN என குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். இதன் பின்னர், பிஎஃப் கனக்கில் எவ்வளவு பணம் உள்ளது, கடைசியாக செலுத்தப்பட்ட பிஎஃப் பங்களிப்பு உள்ளிட்ட அனைத்து முக்கிய தகவல்களும் குறுஞ்செய்தியாக வந்துவிடும்.

மிஸ்டு கால் மூலம் தெரிந்துக்கொள்வது

பிஎஃப் இருப்பை மிஸ்டு கால் மூலம் தெரிந்துக்கொள்ள, பிஎஃப் கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்கு கால் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் பிஎஃப் இருப்பை குறித்து உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அதில் பிஎஃப் கணக்கின் இருப்பு குறித்த அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி மிக எளிதாக இணைய வசதி இல்லாமல் பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளுக்கு ஊசி போடும் போது கதறி கதறி அழுத தந்தை - வைரல்!
மகளுக்கு ஊசி போடும் போது கதறி கதறி அழுத தந்தை - வைரல்!...
பாரம்பரிய உணவு! மட்டன் சாம்பார் செய்வது எப்படி..?
பாரம்பரிய உணவு! மட்டன் சாம்பார் செய்வது எப்படி..?...
மண்பானை தண்ணீரில் இவ்வளவு விஷயம் இருக்கா?
மண்பானை தண்ணீரில் இவ்வளவு விஷயம் இருக்கா?...
புஷ்பா 2வில் வில்லன் மியூசிக் இப்படித்தான் உருவானது- சாம்சிஎஸ்
புஷ்பா 2வில் வில்லன் மியூசிக் இப்படித்தான் உருவானது- சாம்சிஎஸ்...
வீட்டு கடனை சுலபமாக அடைக்க வேண்டுமா? - இத பண்ணுங்க!
வீட்டு கடனை சுலபமாக அடைக்க வேண்டுமா? - இத பண்ணுங்க!...
பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை.. இராணுவ வீரர் வீரமரணம்..!
பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை.. இராணுவ வீரர் வீரமரணம்..!...
வைரலான சிம்ரனின் டப்பா ரோல் பேச்சு... அவரே கொடுத்த விளக்கம்
வைரலான சிம்ரனின் டப்பா ரோல் பேச்சு... அவரே கொடுத்த விளக்கம்...
விடுதலை 2 ஷூட்டிங் முடியும்போது மகிழ்ச்சியாக இல்லை- விஜய் சேதுபதி
விடுதலை 2 ஷூட்டிங் முடியும்போது மகிழ்ச்சியாக இல்லை- விஜய் சேதுபதி...
புதிய பாபா வங்கா கணிப்பால் பயணங்களை ரத்து செய்யும் பொதுமக்கள்!
புதிய பாபா வங்கா கணிப்பால் பயணங்களை ரத்து செய்யும் பொதுமக்கள்!...
மேஷ ராசிக்கு செல்லும் சுக்கிரன்.. இந்த 6 ராசிக்கு ராஜயோகம்!
மேஷ ராசிக்கு செல்லும் சுக்கிரன்.. இந்த 6 ராசிக்கு ராஜயோகம்!...
கிரீஸ் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையால் பொதுமக்கள் அச்சம்!
கிரீஸ் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையால் பொதுமக்கள் அச்சம்!...