AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பயணிகளே அலர்ட்.. தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரம்

South District Train Pattern Changes : மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட வாடிப்பட்டி - கொடைரோடு இடையே உள்ள பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தென் மாவட்ட ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2025 ஜூன் 14ஆம் தேதி வரை சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகளே அலர்ட்.. தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்.. முழு விவரம்
மாதிரி புகைப்படம் Image Source: Pinterest
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 04 Jun 2025 12:37 PM IST

சென்னை, ஜூன் 04 : தென்மாவட்ட விரைவு ரயில்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே  (southern railway) அறிவித்துள்ளது. மதுரை கோட்ட ரயில்வேவிற்கு உட்பட பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் ரயில்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இதுபோன்ற நேரங்களில் பயணிகளின் சிரமத்தை போக்க, சிறப்பு ரயில்களையும் தெற்கு ரயில்வே இயக்கி வருகிறது. குறைந்த கட்டணம், வசதியான பயணம் என்பதால் பொது மக்கள் ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணித்து வருகின்றனர்.

தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம்

பயணிகளுக்காக பல்வேறு அதிநவீன் ரயில்களையும் இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தி வருகிறது. அதே நேரத்தில், பராமரிப்பு பணிகளுக்காக அவ்வப்போது ரயில்வே நிர்வாம் சில வழித்தடங்களில் ரயில் சேவை நிறுத்துகிறது. மேலும், ரயில் சேவையில் மாற்றமும் செய்கிறது.

அந்த வகையில் தான், தற்போது தென் மாவட்ட ரயில்களில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட வாடிப்பட்டி – கொடைரோடு இடையே உள்ள பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், தென் மாவட்ட ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வ அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே அறிவிப்பு

அதன்படி, வண்டி எண் 16848 செங்கோட்டை – மயிலாடுதுறை ரயில் 2025 ஜூன் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்கிறது. இந்த ரயில் அருப்புக் கோட், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மறுமார்க்கத்தில் மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் சென்றடைகிறது. இந்த ரயில் புதுக்கோட்டை, காரைக்குடி, மானாதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

கன்னியாகுமரி ஹவுரா விரைவு ரயில் 2025 ஜூன் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து விருதுநகர் மனாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரயில் மதுரை, திண்டுக்கல்லில் நின்று செல்லும். மேலும், மனாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டையிலும் நின்று செல்லும்.

மேலும், வண்டி எண் 16322 காலை 8 மணிக்கு இயக்கப்படும் கோவை – நாகர்கோவில் விரைவு ரயில் 2025 ஜூன் 6,14ஆம் தேதிகளில் திண்டுக்கல், நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், வண்டி எண் 07192 மதுரை – கச்சிக்குடா சிறப்பு ரயில் 2025 ஜூன் 4,11ஆம் தேதிகளில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்திற்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 12 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Follow Us