விபத்துகளை தடுக்க புதிய வழி.. பேருந்துகளில் வரும் அதிநவீன ஏஐ கருவி.. தமிழக அரசு திட்டம்!
New Safety system In Goverment Buses : தமிழகத்தில் விபத்துகளை தடுக்க, பேருந்துகளில் அதிநவீன ஏஐ கருவிகளை அமைக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்காக டெண்டரும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.2 கோடி மதிப்பில் முதற்கட்டமாக 500 பேருந்துகளில் இந்த ஏஐ கருவி நிறுவப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
                                சென்னை, ஜூன் 04 : தமிழக்ததில் ஏற்படும் விபத்துகளை தடுக்க அரசு பேருந்துகளில் அதிநவீன கருவியை (New safety system) தமிழக அரசு நிறுவப்பட உள்ளது. அதாவது, அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர் கண்காணிப்பு அமைப்புகளை (driver monitoring system) நிறுவ தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.2 கோடி ஒதுக்கியுள்ளது. தமிகத்தில் சாலை விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக, அரசு பேருந்துகள் அவ்வப்போது விபத்துகளில் சிக்கி வருகிறது. இதில் பெரும்பாலான விபத்துகளில் ஓட்டுநர்களின் கவனக்குறைவே காரணம் என சொல்லப்படுகிறது. எனவே, விபத்துகளை குறைக்க தமிழக அரசு பேருந்துகளில் ஓட்டுநர் கண்காணிப்பு அமைப்புகளை அமைக்கப்பட உள்ளது. driver monitoring system (dms) எனும் அதிநவீன கருவியை மாநகர பேருந்நதுகள் உள்ளிட்ட அனைத்து வகையான பேருந்துகளிலும் தமிழக அரசு அமைக்க முடிவு செய்துள்ளது.
பேருந்துகளில் வரும் அதிநவீன கருவி
போக்குவரத்துத் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில், அதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதற்கான டெண்டரையும் மாநில சாலைப் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.
ரூ.17 கோடிக்கு இரண்டு டெண்டர்களை அ றிவித்துள்ளது. சாலைப் போக்குவரத்து நிறுவனம் (IRT) வெளியிட்டுள்ள டெண்டர் அறிவிப்புகளின்படி, முதற்கட்டாக 500 பேருந்துகளில் ஓட்டுநர் கண்காணிப்பு கருவி நிறுவப்பட உள்ளது. ரூ. 2 கோடி செலவில் 500 பேருந்துகளில் இந்த அதிநவீன கருவியை தமிழக அரசு அமைக்க உள்ளது.
மேலும், அரசு பேருந்துகளில் 360 டிகிரி கேமரா கண்காணிப்ப அமைப்புகளும் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு பேருந்துகளிலும் 4 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. பேருந்தின் முன்புறம், பின்புறம், உட்புறம், வெளிப்புறத்தில் கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன.
விபத்துகளை தடுக்க புதிய வழி
டைம்ஸ் ஆஃப் இந்தியா தகவலின்படி, பேருந்துகளில் அமைக்கப்பட உள்ள ஓட்டுநர் கண்காணிப்பு அமைப்புகள் விபத்துகளை தடுக்க பெரிதும் உதவும். இது கருவி ஓட்டுநர் சோர்வு, கவனச்சிதறல் அல்லது தூக்கமின்மை போன்றவற்றை கண்காணிக்கும் திறன் கொண்டது.
மேலும், ஓட்டுநரின் கவனக்குறைவு, தலை குனிதல் போன்றவை கண்டறியப்பட்டால், இந்த கருவி ஓட்டுநருக்கு ஓலி அல்லது காட்சி மூலம் எச்சரிக்கை கொடுக்கும் திறன் கொண்டது. இதனால் விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மேலும், சந்தேக நபர்கள் பேருந்தின் குறுக்கே செல்வது குறித்து கண்டறிந்து ஓட்டுநருக்கு சிக்னல் கொடுக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த கருவி பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில், மேலும், அதிகமான பேருந்துகளில் இந்த கருவி நிறுவப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர். 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் பேருந்துகளில் இந்த ஏஐ கருவி நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் பயணிகள் இனி பாதுகாப்பாக செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
                        


