Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. முருகனை காண சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்.. வெளியான அறிவிப்பு!

Tiruchendur Murugan Temple Kumbabishekam : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் 2025 ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிக்கெட் முன்பதிவு 2025 ஜூலை 4ஆம் தேதியான இன்று தொடங்குகிறது.

திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.. முருகனை காண சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்.. வெளியான அறிவிப்பு!
சிறப்பு ரயில்கள்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 04 Jul 2025 07:12 AM

சென்னை, ஜூலை 04 : திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தையொட்டி, ((Tiruchendur Murugan Temple Kumbabishekam) பக்தர்களின் வசதிக்காக சென்னையில் சிறப்பு ரயில்களை  (Special Train) தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு 2025 ஜூலை 4ஆம் தேதியான இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முருகணை காண சென்னையில் இந்த ரயில்கள் மூலம் சுலபமாக செல்லலாம். அறுபடை வீடுகளில் ஒன்றாக திருச்செந்தூர சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு, 2025 ஜூலை 7ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. 2025 ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 முதல் 6.50 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடக்கும் நிலையில், அதற்கான பணிகள் தீவிரமாகி உள்ளன. இதற்காக ரூ.300 கோடி மதிப்பில் பணிகள் நடந்து முடிந்துள்ளன.

திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

இதற்காக ராஜகோபுரத்திற்கு அருகே 8 ஆயிரம் சுதுர அடி பரப்பளவில் 76 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தக்ரள் கலந்த கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தர உள்ளனர்.  இந்த நிலையில், பக்தர்களின் வசிக்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை செங்கோட்டை இடையே சிறப்பு ரயிலல்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறித்துள்ளது.

அதன்படி, வண்டி எண் 06089 சென்னையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 2025 ஜூலை 6ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 2025 ஜூலை 7ஆம் தேதி காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடைகிறது.

எங்கெங்கு நின்று செல்லும்?


மறுமார்க்கத்தில் 2025 ஜூலை 7ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 2025 ஜூலை 8ஆம் தேதி எழும்பூர் ரயில் நிலையத்திற்கு காலை 9.05 மணிக்கு வந்தடைகிறது. இந்த ரயில் ராம்பரம், செங்கல்பட்டு, மேல்மருத்துவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, தென்காசி, செங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு 2025 ஜூலை 4ஆம் தேதியான இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முன்னதாக, திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.