90’s வைபுக்கு ரெடியாகுங்க.. சென்னைக்கு மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பஸ்.. எந்த ரூட்ல தெரியுமா?
Chennai Double Decker Buses : சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் முதற்கட்ட 20 டபுள் டக்கர் மின்சார பேருந்துகளை மாநகர போக்குவரத்து கழகம் இயக்கப்பட உள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 03 : சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் (Chennai Double Decker Buses) பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான பணிகளை மாநகரப் போக்குவரத்து கழகம் முடித்துள்ள நிலையில், விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தியாவில் எந்த நகரத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் போக்குவரத்து வசதி உள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில்கள், மின்சார ரயில்கள், பேருந்து வசதி என எந்த நகரத்திலும் இல்லாத அளவுக்கு சென்னையில் போக்குவரத்து வசதிகள் சீரானதாக இருக்கிறது. இதோடு இல்லாமல் புதிய பேருந்துகளை தமிழக அரசு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறது. அண்மையில் கூட, மாற்றுத்திறனாளிகளுக்காக தாழ்தள பேருந்துகள், மின்சாரப் பேருந்துகளை மாநகர போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் சென்னை மக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது, சென்னை மாநகரில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது.
அண்மையில் கொல்கத்தா மும்பை போன்ற நகரங்களில் மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் சென்னையிலும் விரைவில் வரவுள்ளது. அதாவது தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ், 20 மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் காமராஜர் சாலை அண்ணா சாலை மகாபலிபுரம் கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட வழித்தடங்களில் இந்த டபுள் டக்கர் பேருந்து சேவை இயக்கப்பட உள்ளது.
Also Read : ஓணம் பண்டிகை.. சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்.. நோட் பண்ணுங்க பயணிகளே!




சென்னைக்கு மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பஸ்
தனியார் நிறுவனமே இந்த டபுள் டக்கர் பேருந்துகளை தயாரிக்கிறது. ஆனால் கட்டண நிர்ணயம், பாதை திட்டமிடல் போன்ற போன்றவற்றை மாநில அரசு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும். விரைவில் இதற்கான டெண்டர்கள் விடப்பட்டு, 2025 ஆம் ஆண்டுக்குள் டபுள் டக்கர் பேருந்துகள் சென்னையில் அறிமுகமாக உள்ளது.
முன்னதாக 1970ஆம் ஆண்டு டபுள் டக்கர் பேருந்துகள் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சுமார் 10 ஆண்டுகளுக்கு இந்த பேருந்துகள் சென்னையில் ஓடிய பின்னர் 1980ல் இந்த பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் 1997 ஆம் ஆண்டு சென்னையில் கொண்டுவரப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் 2008 ஆம் ஆண்டு டபுள் டக்கர் பேருந்து சேவை நிரந்தரமாக நிறுத்தப்பட்டது.
Also Read : திடீரென பிரேக் போட்ட டிரைவர்.. பேருந்தில் இருந்து வெளியே விழுந்த குழந்தை.. மதுரையில் அதிர்ச்சி!
அதன் பிறகு சென்னையில் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை இந்த நிலையில் தான் தற்போது சென்னையில் மீண்டும் இரட்டை அடுத்த பேருந்து இயக்கப் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்தில் சுமார் 30 முதல் 40 வரை அமர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.