Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. பிங்க் ஆட்டோ வாங்க செம்ம சான்ஸ்… விண்ணப்பிக்க அழைப்பு

Chennai Pink Auto Scheme : சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற மூன்றாம் கட்டமாக விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் பிங்க் ஆட்டோ பெற விரும்பும் பெண்கள், 2025 செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பு..  பிங்க் ஆட்டோ வாங்க செம்ம சான்ஸ்… விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை இளஞ்சிவப்பு ஆட்டோImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 29 Aug 2025 08:52 AM

சென்னை, ஆகஸ்ட் 29 :  சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் (Chennai Pink Auto Scheme) திட்டத்திற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற மூன்றாம் கட்டமாக விண்ணப்பம் செய்திட தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. பெண் குழந்தைகள், பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்களின் முன்னேற்றத்திற்காக அவர்களுக்காக பிரத்யேக திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண்களுக்கு சொந்த காலில் நிற்பாக தமிழக அரசு பிரத்யேகமாக இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தை தொடங்கியது. 2025 மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தையொட்டி, இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் சுயமான ஆட்டோக்கள் வாங்க உதவித் தொகையை அரசு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், பெண்கள் விண்ணப்பித்து ஆட்டோக்களை வாங்கிக் கொள்ள முடியும். இதற்கு என்று சில தகுதிகள் உள்ளன. முதல் கட்டமாக 165 ஆட்டோக்கள் பெண் ஓட்டுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தற்போது மூன்றாம் கட்டத்திற்கான விண்ணப்பத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற 2025 செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்  என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Also Read : டிஜிட்டல் கைது மோசடி வலையில் சிக்கிய முதியவர்.. ரூ.13 லட்சம் பணத்தை மொத்தமாக சுருட்டிய மோசடி கும்பல்!

பிங்க் ஆட்டோ வாங்க விண்ணப்பிக்கலாம்


இந்தத் திட்டம் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும், மேலும் விண்ணப்பதாரர்கள் 20 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களாகவும், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் சென்னையில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எனவே, சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்ட விருப்பமுடைய பெண்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை 600 001, சிங்காரவேலர் மாளிகை, உள்ள மாவட்ட சமூக நல அலுவலர் (வடக்கு) அல்லது சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் (தெற்கு) என்ற முகவரிக்கு 2025 செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : வேற லெவலில் மாறப்போகும் கூமாபட்டி.. ரூ.10 கோடி கொடுத்த தமிழக அரசு… என்னவெல்லாம் வரும்?

தேவையான ஆவணங்கள்

பிங்க் ஆட்டோ திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தேவையான அனைத்து ஆவணங்களுடன் சென்னை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வாக்காளர் அடையாள அட்டை, சென்னையில் இருப்பதற்கான இருப்பிட சான்று ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.