Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

10 நாட்கள் பயணம்.. லண்டன், ஜெர்மனி செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. வெளியான பயணத் திட்டம்!

CM MK Stalin Germany London Visit : தமிழக முதல்வர் ஸ்டாலின் 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தில் பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளார். மேலும், அங்கிருக்கும் தமிழர்களையும் சந்தித்து அவர்களுடன் உரையாற்ற உள்ளார்.

10 நாட்கள் பயணம்.. லண்டன், ஜெர்மனி செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. வெளியான பயணத் திட்டம்!
முதல்வர் ஸ்டாலின்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 26 Aug 2025 07:25 AM

சென்னை, ஆகஸ்ட் 26 : தமிழக முதல்வர் ஸ்டாலின் 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் 10 நாட்கள் பயணமாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். ஜெர்மனி, லண்டனுக்கு (CM MK Stalin Foreign Visit) 10 நாட்கள் பயணமாக செல்ல உள்ளார். வெளிநாடுகளுக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், பல்வேறு தொழில் முனைவோர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்க்க உள்ளார்.  தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி ஒரு டிரில்லியன் டார் என்ற அளவுக்கு உயர்த்த ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். 2024-25ஆம் ஆண்டு தமிழ்நாடு 14.02 சதவீத உண்மை வளர்ச்சி விகிதம் பெற்று, நாட்டிலேயே அதிக வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றிருந்தது.

இப்படியான தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேகொண்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு வருகிறார். துபாய், துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தற்போது வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இது அவரது ஐந்தாவது வெளிநாடு பயணமாகும். இந்த முறை லண்டன், ஜெர்மணிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

2025 ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின், 2025 செப்டம்பர் 8ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார். இதன் மூலம் முதல்வர் ஸ்டாலின் 10 நாட்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த நிலையில், அதற்கான பயணத் திட்டம் தற்போது வெளியாகி உள்ளது.  அதன்படி, 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி புறப்படுகிறார்.

லண்டன், ஜெர்மனி செல்லும் முதல்வர் ஸ்டாலின்


‘தொடர்ந்து, ஆகஸ்ட் 31ஆம் தேதி ஜெர்மனியில் அயலக அணி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இதை தொடர்ந்து ஆகஸ்ட் 31, 2025 அன்று பிற்பகல் 2:30 மணி முதல் 5:30 மணி வரை, கோலோன் மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள தமிழர்களை சந்தித்து உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்ஜெர்மனியில் நடக்கும் அயல் நாட்டுத் தமிழ் இந்தியர்கள் சங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாடுகிறார்.

தொடர்ந்து, செப்டம்பர் 1ஆம் தேதி ஜெர்மனியில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு 2025 செப்டம்பர் 2,3ஆம் தேதிகளில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொழில் முனைவோரை சந்தித்து உரையாடுகிறார். மேலும், 2025 செப்டம்பர் 4ஆம் தேதி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அயலக தமிழக நல வாரியத்துடனான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 2025 செப்டம்பர் 7ஆம் தேதி மாலை அங்கிருந்து புறப்பட்டு, 2025 செப்டம்பர் 8ஆம் தேதி சென்னை திரும்புகிறார்முக்கியமாக இந்த பயணத்தில் பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.