Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆகஸ்ட் 30ல் வெளிநாடுகளுக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. திட்டம் என்ன? டி.ஆர்.பி ராஜா தகவல்!

Tamil Nadu CM MK Stalin Visit Germany England : தமிழக முதல்வர் ஸ்டாலின் 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆகஸ்ட் 30ஆம் தேதி புறப்படும் அவர், 2025 செப்டம்பர் 8ஆம் தேதி சென்னை திரும்புவார் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

ஆகஸ்ட் 30ல் வெளிநாடுகளுக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின்..  திட்டம் என்ன? டி.ஆர்.பி ராஜா தகவல்!
முதல்வர் ஸ்டாலின்Image Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 21 Aug 2025 07:34 AM

சென்னை, ஆகஸ்ட் 21 : முதலீடுகளை ஈர்க்க இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார். 2025 ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாரின் மாநிலத்தின் பொருளார வளர்ச்சியில் முக்கியமாக கவனம் செலுத்தி வருகிறார். 2030ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி ஒரு டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளார். இதனால், முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் டிஆர்.பி ராஜா அறிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார். துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்களுக்கு கையெழுத்திட்டார். இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தனது ஆட்சி காலத்தில் ஐந்தாவது முறையாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த முறை இங்கிலாந்து, ஜெர்மணி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Also Read : கூட்டணியில் புதிய கட்சிகள்? முதல்வருடன் முக்கிய மீட்டிங் நடத்திய கூட்டணி தலைவர்கள்.. என்ன மேட்டர்?

அங்கு செல்லும் அவர், பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளார். மேலும், அங்கிருக்கும் தமிழ் வம்சாவளியினரையும் அவர் சந்திக்க உள்ளார். இந்த பயணத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழுவில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜ உள்ளிட்டோரும் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

ஆகஸ்ட் 30ல் வெளிநாடுகளுக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின்


இதுகுறித்து தனது எக்ஸ தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, ”2021 முதல் கையெழுத்திடப்பட்ட அனைத்து முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் 77 சதவீதம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது என்பதைப் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது இந்தியாவில் எந்த பகுதியும் காணாத அளவு 72 சதவீத செயல்பாட்டு அளவை தமிழகம் பெற்றுள்ளதுதற்போது புதிய உச்சமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் செயல்பாட்டு அளவு 75 சதவீதத்தை தாண்டியுள்ளது.

Also Read : நிர்மலா சீதாராமனுடன் திடீர் சந்திப்பு.. அமைச்சர் தங்கம் தென்னரசு வைத்த முக்கிய கோரிக்கை!

2024ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. தமிழகத்தில் இரண்டு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. செப்டம்பர் 11ல் ஓசூரிலும், அதற்கு பிறகும் கோவையிலும் நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி மற்றும் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்கிறார். அவர் 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதி காலை 9 மணிக்கு புறப்பட்டு செப்டம்பர் 8ஆம் தேதி காலை 8 மணிக்கு சென்னை திரும்புகிறார்” என குறிப்பிட்டார்.