முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு.. நன்றி சொன்ன தூய்மை பணியாளர்கள்!
Chennai Conservancy Workers Meet CM MK Stalin : சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் தூய்மை பணியாளர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தூய்மை பணியாளர்களுக்காக 6 புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.

சென்னை, ஆகஸ்ட் 15 : சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை (CM MK Stalin) தூய்மை பணியாளர்கள் (Chennai Conservancy Workers) நேரில் சந்தித்தனர். புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர்கள் நன்றி தெரிவித்தனர். அப்போது, இவர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு, மேயர் பிரியா உடன் இருந்தனர். முன்னதாக, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, தூய்மை பணியாளர்கள் பேரணியிலும் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6 தூய்மை பணிகளுக்கான ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை அருகே 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.




இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றம், தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது. அதோடு, ரிப்பன் மாளிக்கை முன்பு போராட்டம் நடத்தாமல், அனுமதிக்கப்பட்ட இடத்தில் நடத்தலாம் என உத்தரவிட்டது. இதனை அடுத்து, மாநகர காவல்துறையினர் 13 நாட்களாக போராடி வந்த தூய்மை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோரை இரவில் கைது செய்தனர். வலுக்கட்டாயமாக அவர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர். தொடர்ந்து, அவர்களை சிறிது நேரம் கழித்து விடுவித்த நிலையில், வழிக்கறிஞர்களை கைது செய்துள்ளனர்.
Also Read : ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்.. நடவடிக்கை எடுக்க உத்தரவு.. போக்குவரத்துத் துறை வார்னிங்
முதல்வர் ஸ்டாலினை சந்தித்த தூய்மை பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்களின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்தேன்.
நேற்று நமது அரசு வெளியிட்ட அறிவிப்புகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்து, மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றையும் பரிசீலித்து நிறைவேற்றிக் கொடுப்போம்.
என்றைக்கும் நாம் உழைக்கும் மக்களுக்குத்… pic.twitter.com/jiZCAyMLYg
— M.K.Stalin (@mkstalin) August 15, 2025
இப்படியான சூழலில், 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதியான நேற்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, தூய்மை பணியாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தூய்மை பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கு பலரும் நன்றி தெரிவித்துள்ளது.
2025 ஆகஸ்ட் 15ஆம் தேதியான இன்று கூட, சென்னையில் மேயர் பிரியா தலைமையில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தூய்மை பணியாளர்கள் பேரணி நடத்தினர். இந்த நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலினை தூய்மை பணியாளர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
Also Read : திமுக அரசை கடுமையாக சாடிய ஆளுநர் ரவி.. முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவு.. பரபரப்பு!
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ”தூய்மைப் பணியாளர்களின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்தேன். நேற்று நமது அரசு வெளியிட்ட அறிவிப்புகளுக்கு மகிழ்ச்சி தெரிவித்து, மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றையும் பரிசீலித்து நிறைவேற்றிக் கொடுப்போம். என்றைக்கும் நாம் உழைக்கும் மக்களுக்குத் துணையாக நிற்போம்” என தெரிவித்தார்.