திமுக அரசை கடுமையாக சாடிய ஆளுநர் ரவி.. முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவு.. பரபரப்பு!
Governor RN Ravi : ஆளுநர் ரவி தனது சுதந்திர தின வாழ்த்து குறிப்பில், திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். இதனை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளார். மேலும், பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களிலும் உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு இல்லை எனவும் தெரிவித்தார்.

சென்னை, ஆகஸ்ட் 14 : தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி (Governor RN Ravi) தனது சுதந்திர தின (Independence Day) வாழ்த்து குறிப்பில், திமுக அரசை (DMK Government) அவர் கடுமையாக சாடினார். ஏழைகளுக்கு எதிராக சமூகப் பாகுபாடு உள்ளதாகவும், இளைஞர்களிடம் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் ஆளுநர் ரவி கடுமையாக விமர்சித்து உள்ளார். இதனை தொடர்ந்து, சுதந்திர தினத்தையொட்டி, நடக்கும் ஆளுநரின் தேநீர் விருந்திலும் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். அதோடு, பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களிலும் உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு இல்லை எனவும் தெரிவித்தார். தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
2021ஆம் ஆண்டு ஆளுநர் ரவி பொறுப்பேற்றத்தில் இருந்தே, தமிழக அரசுக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு விஷயங்களில் தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்பட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாடி வருகிறார். இப்படியான சூழலில், சுதந்திர தின வாழ்த்து குறிப்பில், திமுக அரசை ஆளுநர் ரவி கடுமையாக சாடினார்.




Also Read : 79வது சுதந்திர தின கொண்டாட்டம்.. நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம்..
திமுக அரசை கடுமையாக சாடிய ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி அவர்களின் சுதந்திர தின செய்தி. (3/3) pic.twitter.com/6a22c5H5hz
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) August 14, 2025
அதாவது, “தமிழகத்தில் பெண்களும் குழந்தைகளும் வீட்டைவிட்டு வெளியே வர அச்சப்பட்டும், பாதுகாப்பற்றவர்களாகவும் உணர்கிறார்கள். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் 33 சதவிகிதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன.
தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாடு கடுமையாக அதிகரித்து வருகிறது. அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் சக்திபடைத்தவர்கள் செயல்படுவதால் போதைப் பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்துவது கடினமாகிறது.ஏழைகள், விளிம்பு நிலையில் இருப்போருக்கு எதிராக கல்வி, சமூக பாகுபாடு இருக்கிறது” என தெரிவித்தார்.
Also Read : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூடும் அமைச்சரவை கூட்டம்.. விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?
தேநீர் விருந்தை புறக்கணித்த முதல்வர்
ஆளுநரின் ரவியின் விமர்சனத்தை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளார். ஆளுநர் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சுதந்திர தினத்தையொட்டி நடக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். மேலும், முன்னதாக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளனர். 2025 ஆகஸ்ட் 18,19ஆம் தேதிகளில் நடக்கும் அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் ஆகிய பல்கலைக்கழங்களின் பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்க போவதில்லை எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.