ஆளுநரிடமிருந்து பட்டம் பெற மறுத்த மாணவி.. திமுகவின் தரங்கெட்ட நாடகம்.. அண்ணாமலை காட்டம்..
Annamalai Condemns Dmk: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவியின் செயலை கண்டித்து, இது திமுகவினரின் தரங்கெட்ட நாடகம் என முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை, ஆகஸ்ட் 14, 2025: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 13, 2025, தேதியான நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, துணைவேந்தர் சந்திரசேகர், உயர் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். பட்டமளிப்பு விழாவில் 650 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற மாணவி ஜீன் ஜோசப் என்பவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் இருந்து தனது பட்டத்தை பெற மறுத்தார். அதோடு அருகில் இருக்கக்கூடிய துணைவேந்தர் சந்திரசேகரிடம் தனது பட்டத்தை கொடுத்து வாழ்த்து பெற்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏன் ஆளுநரிடம் இருந்து பட்டம் பெறவில்லை – மாணவி ஜீன் ஜோசப் விளக்கம்:
இது தொடர்பாக பேசிய மாணவி ஜீன் ஜோசப், “ நான் திராவிட சிந்தனை கொண்டவள். தமிழ் மற்றும் தமிழகத்திற்கு எதிராக இருக்கும் ஆளுநர் ஆர்.என் ரவியிடம் இருந்து நான் எதற்காக பட்டம் பெற வேண்டும். அருகில் இருந்த துணைவேந்தர் சந்திரசேகர் அதிக பட்டதங்களை பெற்றுள்ளார். அவரிடம் இருந்து எனது முனைவர் பட்டத்தை பெறுவது பொருத்தமாக இருக்கும் என கருதி இதை செய்தேன். தமிழகத்தில் பட்டம் கொடுப்பதற்கு வேறு யாரும் இல்லையா ஏன் ஆளுநரிடமிருந்து பெற வேண்டும்” என பேசி இருந்தார்.
Also Read: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்.. வானிலை ஆய்வு மையம்!
மாணவியின் சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் திரு. ராஜன் என்ற நபரின் மனைவி, திருமதி. ஜீன் ஜோசப் என்பவர், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.
காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி… pic.twitter.com/R6DYqTqGQA
— K.Annamalai (@annamalai_k) August 13, 2025
இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதற்கு கட்டணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது வலைதள பக்கத்தில், “ நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் ராஜன் என்ற நபரின் மனைவி ஜீன் ஜோசப் என்பவர் ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார். காலம் காலமாக கட்சியில் பெயர் வாங்க திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்