Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்.. நடவடிக்கை எடுக்க உத்தரவு.. போக்குவரத்துத் துறை வார்னிங்

Omni Bus Fare Hike : தொடர் விடுமுறையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனை அடுத்து, போக்குவரத்துத் துறை முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்.. நடவடிக்கை எடுக்க உத்தரவு.. போக்குவரத்துத் துறை வார்னிங்
ஆம்னி பேருந்துகள்
Umabarkavi K
Umabarkavi K | Published: 15 Aug 2025 06:30 AM

சென்னை, ஆகஸ்ட் 15 : ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் (Omni Bus Fare Hike) வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை  அறிவித்துள்ளது. மேலும், ஆம்னி பேருந்துகளை சோதனை செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சுதந்திர தினம், வார விடுமுறை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி (இன்று) சுதந்திர தினம், 2025 ஆகஸ்ட் 16ஆம் தேதி (நாளை) சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி, 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதியான நேற்று முதலே மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்கின்றனர்.

இதற்காக சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. ஆனால், பேருந்துகள் மற்றும் ரயில்களில் டிக்கெட்டுகள் தீர்ந்துள்ளன. இதனால், மக்கள் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிகிறது. சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமாக சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.800 முதல் ரூ.1000 வசூலிக்கப்படுகிறது.

Also Read : சென்னை டூ திருச்சி.. முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்.. மிஸ் பண்ணாதீங்க!

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

ஆனால், விடுமுறை என்பதால் டிக்கெட்டு கட்டணம் ரூ.4,000 வரை உயர்ந்துள்ளதுமேலும், சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும் ரூ.4,000 வரை உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் இருந்து கோவை, திருப்பூருக்கு ரூ.2000 முதல் ரூ.3000 வரை வசூலிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆம்னி பேருந்து அதிக வசூலிப்பதை தடுக்க வேண்டும எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்இந்த நிலையில், போக்குவரத்துத் துறை முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை தொடர்ந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள்.

Also Read : 3 நாட்களுக்கு புறநகர் ரயில்கள் ரத்து.. எந்தெந்த வழித்தடத்தில் தெரியுமா?

இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்து அதிகப்பட்டியான கட்டணம் வசூலித்தால் அதனை தடுக்க தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கக்ள மற்றும் போக்குவரத்து சோதனை சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரை கொண்டு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகபட்டியான கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகளை தீவிர சோதனை செய்து அபராதம் விதித்தும் , வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.