இங்கிலாந்து, ஜெர்மனி செல்லும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்.. பயணத்திட்டம் என்ன?
CM MK Stalin Visit to Foreign: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகின்ற 2025 ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்திற்கு முதலீடுகள் ஈர்ப்பதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை, ஆகஸ்ட் 11, 2025: வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டு வந்து தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார். 2021 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு நாடுகளுக்கு சென்று வர்த்தகத்தை ஈர்த்துள்ளார். அந்த வகையில் தற்போது அவர் 10 நாள் பயணமாக இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்கு செல்ல இருக்கிறார். 2025, ஆகஸ்ட் 31ஆம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் இங்கிலாந்து சென்றடைகிறார். பின்னர் செப்டம்பர் 10, 2025 அன்று மீண்டும் தமிழகம் திரும்புகிறார். தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்தும் இலக்கை அடைவதற்கு முக்கியமான படிக்கட்டாக கருதப்படுகிறது. இந்த பயணத்தின் மூலம் பல முன்னணி தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து ஜெர்மனி செல்லும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்:
இந்த பயணத்தின் போது இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் இருக்கக்கூடிய தொழில் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். இதற்கு முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு சுமார் 18,498 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் ஒப்பந்தங்களை மேற்கொண்டு ஆயிரம் கணக்கான வேலை வாய்ப்புகளை தமிழகத்தில் உருவாக்கி தந்துள்ளார்.
மேலும் படிக்க: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து விசிகவினர் பேசக்கூடாது – நிர்வாகிகளுக்கு திருமாவளவன் அறிவுறுத்தல்..
பயணத்திட்டம் என்ன?
அதனைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தின் போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் முதலீட்டாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். அதேபோல் இங்கிலாந்தில் இருக்கக்கூடிய கிங்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவார் எனவும் தகவல் வெளிட்யாகி உள்ளது.
மேலும் படிக்க: திருப்பூரில் ரூ. 295 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கும் முதல்வர் ஸ்டாலின்.. பொள்ளாச்சியில் திட்டம் என்ன?
இங்கிலாந்து மற்றும் ஜெர்மனிக்கு செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்துவதற்கும் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் உடன் செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.