அமெரிக்கா வரி.. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்!
CM MK Stalin Letter To PM Modi : வர்த்தக்கத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கவும், வர்த்தகத்தை மீட்டெடுக்கவும் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனக் கூறியுள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 16 : இந்திய பொருட்களின் மீதான வரியை அமெரிக்க உயர்த்தியுள்ள நிலையில், வர்த்தக்கத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் (CM MK Stalin), பிரதமர் மோடிக்கு (PM Modi) கடிதம் எழுதி உள்ளார். மேலும், இந்த இக்காட்டான சூழலில், மத்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு முழு ஒத்துழைப்பினை வழங்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அக்கடிதத்தில், “இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில், இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டுவதாகவும், தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன்.




தற்போதைய 25 சதவீத வரி மற்றும் அதன் தொடர்ச்சியாக 50 சதவீதஅதிகரிப்பு காரணமாக கடுமையான தாக்கங்களை எதிர்கொள்வதால், தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கவலை அளிக்கும் ஒரு பிரச்சனை. தமிழ்நாட்டின் வலுவான உற்பத்தித் துறை, இதுவரை கண்டிராத ஒரு நெருக்கடியை தற்போது எதிர்கொள்வதாகவும், பல்வேறு துறைகளில் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் அவர்கள் இந்த விஷயத்தில் அவசரமாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் தொழில்துறையைச்சார்ந்தவர்களுடன் கலந்தாலோசித்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Also Read : திமுக அரசை கடுமையாக சாடிய ஆளுநர் ரவி.. முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவு.. பரபரப்பு!
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்
இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களுக்கு… pic.twitter.com/Xbm0caydt3
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 16, 2025
அதோடு, இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கவும், வர்த்தகத்தை மீட்டெடுக்கவும் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு முழு ஒத்துழைப்பினை வழங்கும் எனவும் தனது கடிதத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா வரி
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைளை எடுத்து வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது அதிபர் டிரம்ப் அதிரடியாக வரிகளை அறிவித்து வருகிறார். இதில், அமெரிக்கா இந்தியா இடையே வர்த்தக மோதல் ஏற்பட்டுள்ளது. இந்தியா பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரிகளை விதித்துள்ளது.
Also Read : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூடும் அமைச்சரவை கூட்டம்.. விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன?
இந்தியா பொருட்கள் மீது 25 சதவீதம் வரியை டிரம்ப் விதித்தார். அதைத்தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதி மேலும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் என மொத்தமாக 50 சதவீதம் வரியை விதித்திருந்தார். இதில், 25 சதவீத வரி மட்டும் அமலுக்கு வந்துள்ளது. இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், மீதமுள்ள 25 சதவீத வரி 2025 ஆகஸ்ட் 30ஆம் தேதி அமலுக்கு வர உள்ளது. இது அமலுக்கு வரும் பட்சத்தில், இந்தியா பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.