பல்லாண்டு தொடர வாழ்த்துக்கள்.. ரஜினிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
M.K. Stalin Congratulates Rajinikanth : தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூப்பர் ஸ்டாரார் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் சுமார் 50 வருடங்களைக் கடந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் கூலி படத்தை பார்த்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் அனைவராலும் சூப்பர் ஸ்டார் (SuperStar) என்று அழைக்கப்பட்டு வருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில், தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கூலி (Coolie). இந்த படமானது ரஜினிகாந்தின் 171வது திரைப்படமாக வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுமார் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கடந்த 1975ம் ஆண்டு இயக்குநர் கே. பாலசந்தரால் சினிமாவில் நுழைந்த இவர், இந்த 2025ம் ஆண்டோடு 50 வருடத்தை நிறைவு செய்துள்ளார். இவருக்கு பல்வேறு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் (M.K. Stalin) வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அண்மையில் கூலி திரைப்படத்தைப் பார்த்த இவர், “ரஜினிகாந்தின் நடிப்பு மற்றும் வசனங்களைக் கண்டு வியந்ததாக” அவர் கூறியுள்ளார்.




இதையும் படிங்க : வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணம்.. ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
50 வருட சினிமா பயணம் குறித்து ரஜினிகாந்த் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Thank you 🙏🏻 pic.twitter.com/EnmbSLOEDN
— Rajinikanth (@rajinikanth) August 15, 2025
ரஜினிகாந்திற்கு வாழ்த்துக் கூறிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் :
மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “சினிமாவில் உச்ச நட்சத்திரமாக அரை நூற்றாண்டை நீடிப்பது என்பதே பெரிய சாதனை. சினிமாவில் நுழையும்போது இருந்த அதே துடிப்பும் வேகமும் இன்னும் தங்களிடம் இருப்பதாய், அண்மையில் கூலி திரைப்படத்தைக் கண்டு, அதில் “இவன் பெயருக்கு காந்தம் உண்டு உண்மைதனடா” என உங்களுக்காக எழுதப்பட்ட வரிகள் எவ்வளவு பொருத்தம் என வியந்தேன். மேலும் திரையில் உங்களைக் கண்டு ஆர்ப்பரிக்கும், ரசிகர்களுக்காக உங்களின் அர்ப்பணிப்பும் உழைப்பும் அளப்பரியது கூறியுள்ளார். மேலும் இன்னும் பல்லாண்டு சினிமாவில் தொடர ரசிகனாகவும் , நண்பனாகவும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்” என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க : ஜிம் ஒர்கவுட்டில் மிரட்டும் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ
ரஜினிகாந்தின் 50 வருட சினிமா பயணத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரபலங்கள் :
நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் சுமார் அரை நூற்றாண்டை நிறைவு செய்துள்ளார். இவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி. கமல் ஹாசன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு மற்றும் சினிமா அப்பிரபலங்களும் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர். குறிப்பால் அபாலிவுட் பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷனும் தனது எக்ஸ். பக்கத்தில் ரஜினிகாந்திற்கு வளைத்தது தெரிவித்துப் பதிவை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.