CM MK Stalin On US Tariffs: ’திருப்பூர் ஜவுளித்துறை பாதிப்பு.. நடவடிக்கை தேவை’ மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
Tirupur Exporters Hit By US Tariffs: அமெரிக்காவின் வரியால் தமிழக ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருப்பூர் ஜவுளித்துறையில் ரூ.3,000 கோடி வர்த்தக பாதிப்படைந்ததாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 28 : அமெரிக்க வரியால் (US Tariffs) தமிழக ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் (CM MK Stalin) தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களுக்கு அதிக வரி விதித்துள்ளார். இதனால், இந்தியா உட்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் இந்தியா மீது டிரம்ப் 50 சதவீத வரிகளை விதித்திருக்கிறார். முதலில் 25 சதவீத வரி விதித்த டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக் காட்டி மேலும், 25 சதவீத வரி விதித்தார். இந்த 50 சதவீத வரியும் 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த வரி விதிப்பால் இந்தியாவுக்கு 4,820 கோடி டாலர் நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வரி




இந்த வரி விதிப்பால் இறால், ஆயுத்த ஆடைகள், தோல், ரத்தினங்கள், நகைகள் உள்ளிட்ட தொழிலாளர் சார்ந்த இந்திய நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும். கவேலைவாய்ப்புகள், மருந்துவம், மொபைல் போன் போன்ற துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படலாம். ஐடி துறையில் வேலைவாய்ப்புகளும் குறையும் அபாயமும் உள்ளது.
Also Read : ‘குழந்தைகளை பார்த்ததும் எனர்ஜி வந்துருச்சு’ காலை உணவுத் திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
குறிப்பாக, திருப்பூர் ஜவுளித்துறை கடும் பாதிப்பை சந்திக்கும். இந்தியாவில் இருந்து ஜாரா, வால்மார்ட் போன்ற பிராண்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 16 பில்லியடன் டாலர் மதிப்புள்ள ஆடைகளில் மூன்றில் ஒரு பங்கு திருப்பூர் ஜவுளித்துறை இருக்கிறது. இதனால், அமெரிக்காவின் வரியால் ரூ.3 ஆயிரம் கோடிக்கு ஆயுத்த ஆடை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரியால் கடந்த சில நாட்களாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
The #USTariff hike to 50% has hit Tamil Nadu’s exports hard, especially #Tiruppur’s textile hub, causing a trade impact of nearly Rs.3,000 crore and putting thousands of jobs at risk.
I reiterate my demands to the Union Government for immediate relief and structural reforms to… https://t.co/Yhxo3EfBTM pic.twitter.com/xXe5wVLpjH
— M.K.Stalin (@mkstalin) August 28, 2025
இப்படியான சூழலில், முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்காவின் 50 சதவீத வரியால் தமிழ்நாட்டின் ஏற்றுமதியை கடுமையாகப் பாதித்துள்ளது. குறிப்பாக ஜவுளி மையமான திருப்பூரில் ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
Also Read : 10 நாட்கள் பயணம்.. லண்டன், ஜெர்மனி செல்லும் முதல்வர் ஸ்டாலின்.. வெளியான பயணத் திட்டம்!
இதனால் கிட்டத்தட்ட ரூ.3,000 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வேலை ஆபத்தில் உள்ளன. நமது தொழில்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க உடனடி நிவாரணம் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டு இருந்தார்.