Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

” உங்கள் ரோல் மாடலை இன்ஸ்டாவில் தேடாதீர்கள் ” – மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்..

Tamil Nadu CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ உங்கள் சிந்தனையை சிதைத்து விடக் கூடாது. உங்கள் ரோல் மாடலை இன்ஸ்டாவில் தேடாதீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

” உங்கள் ரோல் மாடலை இன்ஸ்டாவில் தேடாதீர்கள் ” – மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Aug 2025 21:54 PM

சென்னை, ஆகஸ்ட் 22, 2025: இந்திய அளவில் பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது அதற்கு அரசே துணை போகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார். மேலும், உங்கள் ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள் – Likes – ல் கெத்து இல்லை Marks – ல் தான் கெத்து உள்ளது – மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அட்வைஸ் கொடுத்துள்ளார். சென்னை கல்லூரி சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் 100 வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட கொள்கை – முதலமைச்சர் உரை:

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ” முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் போல் பலர் அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்ட பலர் இந்த பள்ளியில் படித்துள்ளனர். கல்வி என்பது உளவியல் , அறிவு, ஆன்மீகம் ரீதியாக சிறந்த அனைத்தையும் வளர்ப்பது. பாடப்புத்தகங்களை பண்பாட்டு ரீதியான வடிவமைத்தார்கள். வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட கொள்கை உள்ளது போல் மாணவர்களை உருவாக்க செயல்பட்டார்கள் என குற்றம்சாட்டிய முதலமைச்சர்,

கல்வி பணிகளை கடந்து சமூக சேவைகளில் ஈடுபட்டு புறக்கணிக்கப்பட்ட படிக்க இயலாத பெண்களுக்கு கல்வி, பாதுகாப்பு அளிக்க சமூக சேவை செய்வதற்கு வாழ்த்துக்கள் என்றார். ஒரு காலத்தில் கல்வி என்பது நமக்கு மறுக்கப்பட்ட ஒன்று. ஏராளமாக போராட்டத்திற்கு பிறகு தான் கல்வி கிடைத்தது. இன்றும் கல்விக்காக போராடும் மக்கள் உள்ளார்கள், பள்ளி மாணவர்களுக்கு என சிறப்பு திட்டங்களை தொடங்கி உள்ளோம்.

Also Read: ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீகாந்திக்கு கட்சி பதவி.. பா.ம.கவில் அதிரடி டிவிஸ்ட்..

பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது:

இந்திய அளவில் பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. அதற்கு அரசே துணை போகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்தியாவில் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் சக்திகள் கொட்டம் விரைவில் அடக்கப்படும். எல்லாரையும் சமமாக பார்க்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Also Read: ”விஜயின் பலம் என்ன? 50 வருஷமா எங்கே போனார்? ” – அண்ணாமலை சரமாரி கேள்வி..

சாதி, மத பிரிவினை பார்க்காமல் எல்லாரையும் சமமாக நடத்தக் கூடிய பண்பை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கொம்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கக்கூடாது என்பார்கள், இப்படி தான் தமிழ்நாடு சமத்துவ பூங்காவாக சகோதரத்துவத்துடன் மாணவர்களாகிய நீங்கள் வளர வேண்டும் . அதனால் தான் அரசியலும், advice உம் பள்ளியில் பேச வேண்டி உள்ளது.

ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள்:


பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சி, பட்டபடிப்பு படித்து முன்னேற வேண்டும். இன்று அறிவியல் வளர்ச்சி அடைந்துவிட்டது நிறைய வாய்ப்புகள் இருக்கிறது, AI புதிய புரட்சியை உருவாக்கி கொண்டிருக்கிறது. அதற்காக ஏன் படிக்க வேண்டும் என்று கருதி விட வேண்டும். எந்த வளர்ச்சியையும் உங்கள் வளர்ச்சிக்காக தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் சிந்தனையை சிதைத்து விடக் கூடாது. உங்கள் ரோல் மாடலை இன்ஸ்டாவில் தேடாதீர்கள்.

Also Read: ”விஜயின் பலம் என்ன? 50 வருஷமா எங்கே போனார்? ” – அண்ணாமலை சரமாரி கேள்வி..

பொழுதுபோக்கு வாழ்க்கையின் ஒரு அங்கம் தான் அதுவே வாழ்க்கை அல்ல. நீங்கள் reels இல் பார்ப்பது எல்லாம் ரியாலிட்டி என்று நம்பி விடாதீர்கள். Likes கெத்து இல்லை marks இல் கெத்து உள்ளது. படிப்பதோடு நன்றாக விளையாடுங்கள்” என தெரிவித்துள்ளார்.