‘குழந்தைகளை பார்த்ததும் எனர்ஜி வந்துருச்சு’ காலை உணவுத் திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
Morning Breakfast Scheme : முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை நகர்ப்புறங்களில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்களை பார்த்ததும் எனர்ஜி வந்துவிட்டதாகவும், இந்த திட்டத்தை செலவு என சொல்ல மாட்டேன் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 26 : முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட (Morning Breakfast Scheme) விரிவாக்கத்தை நகர்ப்புறங்களில் முதல்வர் ஸ்டாலின் (CM MK Stalin) தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் பஞ்சாப் முதல்வர் பகவாத் மானும் உடன் இருந்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், பஞ்சாப் முதல்வர் பகவத் மான், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாணவர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர். காலை உணவு திட்ட நகரப்புறங்களில் விரிவாக்கம் செய்வதன் மூலம் 2,429 பள்ளிகளைச் சேர்ந்த 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கு 3.06 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். காலை உணவுத் திட்டம் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்ப்டடது. முதல்கட்டத்தில் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டது.




இதில் 1,14,095 மாணவர்கள் பயன்பெற்றனர். பின்னர், ஊரகப்பகுதிகளில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டு, 17 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வந்தன்ர. தற்போது நகர்ப்புற பகுதிகளில் 2,429 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 3.06 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். மொத்தமாக தமிழகத்தில் 20,59,00 மாணவ, மாணவிகள் காலை உணவு திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
Also Read : ” உங்கள் ரோல் மாடலை இன்ஸ்டாவில் தேடாதீர்கள் ” – மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்..
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இன்று காலை மாணவர்களுடன் காலை உணவு சாப்பிட்ட பிறகு, அவர்களைப் போலவே நானும் ஒரு உற்சாகத்தை உணர்ந்தேன். இது மாணவர்களைப் போலவே எனக்கும் இந்த நாளை ஒரு சுறுசுறுப்பான மற்றும் நிறைவான நாளாக மாற்றியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், 20 லட்சம் மாணவர்கள் சத்தான உணவைப் பெறுவார்கள். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடக்கம் !#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | #TNBreakfast |@CMOTamilnadu @mkstalin @BhagwantMann@Udhaystalin @mp_saminathan @geethajeevandmk@Subramanian_ma @PKSekarbabu @Anbil_Mahesh@PriyarajanDMK @tnschoolsedu pic.twitter.com/Eah6l0E3mz
— TN DIPR (@TNDIPRNEWS) August 26, 2025
இந்தத் திட்டத்தில் இணைந்ததற்காக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திட்டத்திற்கு ரூ. 600 கோடி ஒதுக்கப்படும். நமது சமூகத்தின் எதிர்காலத்தை உருவாக்குவதில் நமது மாணவர்கள் மிகப்பெரிய முதலீடாக உள்ளனர். பெற்றோர் இருவரும் பணிபுரியும் குடும்பங்களில், இந்த காலை உணவுத் திட்டம் ஒரு பெரிய நிம்மதியாக இருந்து வருகிறது.
Also Read: மாணவர்களுக்கு இலவச லேப்டாப் எப்போது?.. வெளியான முக்கிய தகவல்!
இந்த திட்டத்தை செலவு என சொல்ல மாட்டேன். சூப்பரான சமூக முதலீடுதான் இந்த திட்டம். மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து உயர்ந்தால் போதும். அதுவே இந்த திட்டத்திற்கான வெற்றி தான். காலை உணவுத் திட்டத்தை நானே நேரடியாக கண்காணித்து வருகிறேன். மாணவர்களே நல்ல சாப்பிடுங்க.. நல்லா படிங்க. நல்லா விளையாடுங்க. உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். எங்களுக்கு எப்போதும் நீங்கள் தான். உங்களுக்கான தான் நாங்கள் இருக்கிறோம். இருப்போம்” எனக் கூறினார்.