திருப்பூர் டூ ஐடி துறை .. அமெரிக்காவின் 50 சதவீத வரி.. இந்தியாவுக்கு இவ்வளவு பாதிப்பா?
US President Trump Tariffs : அமெரிக்கா அறிவித்துள்ள 50 சதவீத 22025 ஆகஸ்ட் 27ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால், இந்தியாவின் பொருளதாரம் கடும் பாதிப்புகள் ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. குறிப்பாக, ஜவுளித்துறை, ஐடி துறைகள் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

டெல்லி, ஆகஸ்ட் 27 : இந்தியா பொருட்கள் மீது அமெரிக்கா (US Tariffs) அறிவித்துள்ள 50 சதவீத வரி 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதியான இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. ஏற்கனவே 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி 25 சதவீத அமலுக்கு வந்த நிலையில், மீதமுள்ள 25 சதவீத வரி இன்று அமலுக்கு வர உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை சுட்டிக் காட்டி, அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீத வரியை விதித்திருந்தார். எனவே, அமெரிக்காவின் 50 சதவீத வரியால் இந்தியாவின் பொருளாதாரத்தில் கடும் பாதிப்புகள் ஏற்படும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதியான இன்று அமெரிக்காவின் 50 சதவீத வரி அமலுக்கு வர உள்ள நிலையில், நேற்றை தினம் (2025 ஆகஸ்ட் 26) இந்திய பங்குச்சந்தை கூட கடுமையாக சரிந்தது. 400 புள்ளிகளுக்கு மேல் பங்குச்சந்தை சரிந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், 2025 ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்காவின் 50 சதவீத வரி இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால், இந்தியாவின் பல்வேறு துறைகளில் பாதிப்புகள் ஏற்படலாம். மேலும், சில பொருட்களின் விலை உயரக் கூடும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். வேலைவாய்ப்புகள், மருந்துவம், மொபைல் போன் போன்ற துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படலாம். ஐடி துறையில் வேலைவாய்ப்புகளும் குறையும் அபாயமும் உள்ளது.




Also Read : இந்தியா மீதான 50% வரி நாளை முதல் அமல்.. அமெரிக்கா திட்டவட்டம்!
இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்புகள்
அமெரிக்காவின் 50 சதவீத வரியால் இந்தியாவின் 60.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏற்றுமதியை நேரடியாக பாதிக்கும் என கூறப்படுகிறது. அதாவது, இந்தியாவில் அமெரிக்காவிற்கு மொத்த ஏற்றுமதி என்பது 86.5 பில்லியன் டாலாக உள்ளது. எனவே, இந்த வரி விதிப்பால் ஏற்றுமதி 49.6 பில்லியன் டாலராக சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடைகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், இறால், கம்பளங்கள் மற்றும் தளபாடங்கள் 50% வரி விதிக்கப்படும். இதனால் அந்த துறைகளில் நேரடியாக பாதிக்கப்படும்.
அமெரிக்காவில் ஜவுளி ஏற்றுமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. சீனா 25 சதவீதம், வியாட்நாம் 12 சதவீதம், இந்தியா 9 சதவீதம் உள்ளது. எனவே, இந்த துறைகளில் ஏற்றுமதி 70 சதவீதம் வரை சரிய வாய்ப்புள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி இந்த அளவுக்கு சரிந்தால், மில்லியன் கணக்கான மக்களின் வேலைகள் பாதிக்கப்படலாம்.
Also Read : உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தை தீர்ப்பது கடினமாக உள்ளது.. டிரம்ப் கருத்து!
குறிப்பாக, திருப்பூர் ஜவுளித்துறையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவில் இருந்து ஜாரா, வால்மார்ட் போன்ற பிராண்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 16 பில்லியடன் டார் மதிப்புள்ள ஆடைகளில் மூன்று ஒரு பங்கு திருப்பூர் ஜவுளித்துறை இருக்கிறது. இதனால் அவர்கள் பாதிக்கப்படலாம். ஏற்கனவே, திருப்பூர், நொய்டா, சூரத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.