என்னது! டிரம்ப்பை சந்தித்து ரஷ்ய அதிபர் புதின் இல்லையா? அவரைப் போன்ற வேறு நபரா?
Putin Body Double Debate: உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகஸ்ட் 15, 2025 அன்று சந்தித்து பேசினர். இந்த நிலையில் டிரம்ப்பை சந்தித்தது புதின் இல்லை என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் (Ukraine) இடையே நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் (Vladimir Putin) மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகஸ்ட் 15, 2025 அன்று நள்ளிரவு சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பு அமெரிக்காவின் ஆங்கரேச் பகுதியில் உள்ள ராணுவ படைத்தளத்தில் நடைபெற்றது. பின்னர் இருவரும் செய்தியாள்ரகளை சந்தித்தனர். அப்போது பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், எங்களுக்குள் நடைபெற்ற பேச்சுவார்த்தை, ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் என நம்புவதாக தெரிவித்தார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க வரவில்லை எனவும், அவரைப் போன்ற ஒருவரை அனுப்பி வைத்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
அமெரிக்காவுக்கு வந்தது புதின் இல்லையா?
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இதுகுறித்து ஒருவர் பதிவிட்டுள்ளதாவது, அலாஸ்காவிற்கு வந்தவர் புதின் இல்லை. அவர் முகத்தில் சதைப்பற்று அதிகமாக இருந்தது. மேலும் அவர் வழக்கத்துக்கு மாறாக மகிழ்ச்சியாக இருந்தார். அவர் முகத்தில் சிரிப்புடன் காணப்பட்டார். இது சந்தேகத்துக்கு காரணமாக இருக்கிறது என்றார். மேலும் புதினின் முக்கத்துக்கும் மற்றொருவரின் முகத்துக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவருடைய கன்னங்கள் வட்டமாக இருக்கின்றன. மேலும் புதின் வலது கையை அசைக்காமல் நடப்பார். ஆனால் டிரம்பை சந்தித்தபோது அவர் அப்படி நடக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.




புதின் குறித்து சமூக வலைதளங்களில் பரவம் சர்ச்சை
Anyone that still doesn’t understand that this is Putin’s most expendable double is a moron.pic.twitter.com/e64a5ePXdG
— Jay in Kyiv (@JayinKyiv) August 15, 2025
இதையும் படிக்க : ரஷ்ய விவகாரம் – உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
இணையத்தில் பரவும் விமர்சனங்கள்
சிலர் புதின் அவரைப் போன்ற உருவம் கொண்ட நபர்களை வேலைக்கு வைத்திருக்கிறார் எனவும் பொதுக்கூட்டங்களுக்கு அவர்களை அடிக்கடி பயன்படுத்துவார் என்றும் கூறினர். மற்றொரு நபர் இது உண்மையாக புதின் இல்லை. சாதாரண நிகழ்ச்சிகளுக்கு அவரைப் போன்ற ஒருவரை அனுப்புவார். அவரைத் தான் டிரம்ப்பை சந்திக்க அனுப்பியிருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் இவர் மிக அதிகமாக சிரிக்கிறார். கன்னங்கள் வீக்கமாக இருக்கிறது. புதினின் முகத்தில் பெரும்பாலும் சிரிப்பு இருக்காது. அவர் மிகவும் கட்டுப்பாடுடன் உணர்ச்சி அற்ற முகத்தோடு இருப்பார் . ஆனால் டிரம்ப்பை சந்தித்தவர் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிரார் என்றார்.
இதையும் படிக்க : உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் என நம்புகிறேன்.. டிரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்து பேசிய புதின்!
இதுபோன்ற சர்ச்சைகள் ஏற்படுவது இது முதன்முறை அல்ல. இதனடிப்படையில் Alleged doubles of Vladimir Putin என்ற பெயரில் ஒரு விக்கிப்பீடியா பக்கமே இருக்கிறது. இது தொடர்பான சில கோட்பாடுகளும் வெளியாகி வருகின்றன. ரஷ்ய அதிபர் புதின் தன்னைப் போன்ற பலரை உருவாக்கி வைத்திருப்பதாகவும், ஆனால் நடை, முக பாவனையில் உள்ள சிறிய மாற்றங்கள் அவரை வெளிப்படுத்தி விடுகின்றன என்றும் கூறப்படுகிறது.