Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உக்ரைன் விவகாரம் – பிரதமர் மோடியிடம் விளக்கமளித்த ரஷ்ய அதிபர் புதின்

Modi, Putin Discuss Ties : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசிய வாயிலாக தொடர்புகொண்டு உக்ரைன் விவகாரம் குறித்து பேசியதாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். மேலும் 2025 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெறும் உச்சி மாநாட்டிற்கும் ரஷ்ய அதிபர் புதினுக்கு அழைப்பு விடுத்ததாகவும் தனது பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் விவகாரம் – பிரதமர் மோடியிடம் விளக்கமளித்த ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Aug 2025 19:44 PM IST

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் Vladimir Putinஉக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் அவரிடம ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவின் நிலைப்பாடு குறித்து விளக்கினார். அப்போது அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான  இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். பேச்சுவார்த்தையின் போது இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் வருடாந்திர உச்சி மாநாட்டிற்கு இந்தியா வருகை தருமாறு புதினை நேரில் அழைத்திருக்கிறார்.  இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை

இது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,  எனது நண்பர் ரஷ்ய அதிபர் புதினுடன் நான் நீண்ட உரையாடலை மேற்கொண்டேன். உக்ரைன் தொடர்பான அவரது நிலைப்பாட்டை பகிர்ந்துகொண்டதற்காக நன்றி தெரிவித்தேன். மேலும் நாங்கள் எங்கள் இருதரப்பு திட்டத்தின் முன்னேற்றத்தை பரிசீலித்து, இந்தியா-ரஷ்யா நட்பை மேலும் வலுப்படுத்த முயற்சிப்போம் என மீண்டும் உறுதிப்படுத்தினோம். இந்த ஆண்டு பிற்பகுதியில் ரஷ்ய அதிபர் புதினை இந்தியாவில் வரவேற்க ஆவலுடன் உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.  இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் வரி தொடர்பான பதட்டங்கள் நீடித்து வரும் நிலையில் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதினின் பேச்சுவார்தைத உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்.. ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த அஜித் தோவல்.. முக்கிய மீட்டிங்!

பிரதமர் மோடியின் எகஸ் பதிவு

இதையும் படிக்க : அமெரிக்காவுடன் மோதல்.. முக்கியமான நேரத்தில் இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புதின்

அஜித் தோவலுடன் புதின் சந்திப்பு

புதினுக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான இந்த உரையாடலுக்கு முன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடந்த ஆகஸ்ட் 7, 2025 அன்று  கிரெம்ளினில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். இதன் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு விவாதிக்கப்பட்டது. அனைத்து முனைகளிலும் ஒத்துழைப்பைத் தொடர தனது உறுதிப்பாட்டை டோவல் மீண்டும் வலியுறுத்தினார். கிரெம்ளினில் நடைபெற்ற கூட்டத்தில் தோவலுடன் இந்திய தூதர் வினய் குமாரும் கலந்து கொண்டார். மேலும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்ஜியும் கலந்து கொண்டார்.