Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கல்வான் தாக்குதலுக்கு பிறகு, முதன்முறையாக சீனா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி

PM Modi's China Visit : பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் நடைபெறும் ஷாங்காய் கோஆபரேஷன் ஆர்கனைசேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆகஸ்ட் 31, 2025 அன்று சீனா செல்லவிருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வான் மோதலுக்கு பிறகு அவர் சீனா செல்லவிருப்பதால், அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படுகிறது.

கல்வான் தாக்குதலுக்கு பிறகு,  முதன்முறையாக சீனா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 06 Aug 2025 18:55 PM

டெல்லி, ஆகஸ்ட் 6 : பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi),  ஆகஸ்ட் 31, 2025 முதல் செப்டம்பர் 1, 2025 வரை சீனாவின் (China) தியான்ஜின் நகரில் நடைபெற உள்ள ஷாங்காய் கோஆபரேஷன் ஆர்கனைசேஷன் மாநாட்டில் பங்கேற்க  சீனா செல்லவிருக்கிறார். இந்த மாநாட்டில் பங்கேற்கும் உறுப்பினர்கள், நாடுகளிடையேயான பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு போன்ற முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த சீன பயணத்துக்கு பிறகு இரு நாடுகளிடையேயான உறவுகள் மேம்படுவதோடு, எல்லை பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வான் மோதலுக்கு பிறகு முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி சீனா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி இதற்கு முன் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிற்கு சென்றிருந்தார். அதற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடந்த கல்வான் மோதல் காரணமாக, இந்தியா மற்றும் சீன உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. மேலும் எல்லைப் பகுதியில் கடும் பதற்றங்களை உருவாக்கியது. இந்த சூழ்நிலையில், பிரதமரின் சீனா பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படிக்க:  கூடுதல் வரி விதிப்பேன் என மிரட்டிய டிரம்ப்.. விளக்கம் மூலம் பதிலடி கொடுத்த இந்தியா!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்கும் பிரதமர் மோடி

ஷாங்காய் ஆர்கனைசேஷன்  கார்பரேஷன் மாநாட்டின்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே நடைபெறவுள்ள முக்கிய சந்திப்பாக கருதப்படுகிறது.

இதற்கு முன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி,  சீன அதிபர் ஷி ஜின்பிங்கை கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபரில், ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் போது சந்தித்தார.  பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் ஒரே மேடையில் காணப்பட்டனர். அதன் பின்னர், இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான எல்லை பதற்றம் குறைந்து,  எல்லை தொடர்பாக இருநாட்டு இராணுவ அதிகாரிகளிடையே உரையாடல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதையும் படிக்க : ஆபரேஷன் சிந்தூர் – தன்னிறைவு பெற்ற இந்தியாவின் சக்தி.. வாரணாசியில் பிரதமர் மோடி உரை..

இந்த நிலையில் சீனாவில் நடைபெறவுள்ள எஸ்சிஓ மாநாடும், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பும், அடுத்த கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துவதாக நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.  இதன் மூலம் நீண்ட காலமாக நிலவி வரும் எல்லை பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.