Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நான் என்ன பேசணும்? நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு பிரதமர் மோடி.. வெளியான அறிவிப்பு!

PM Modi On Independence : நாட்டின் 72வது சுதந்திர தினம் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கருத்து கேட்டுள்ளார். தனது சுதந்திர தின உரையில் என்னென்ன கருத்துகள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து மக்கள் பகிர்ந்து கொள்ளலாம் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

நான் என்ன பேசணும்? நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு பிரதமர் மோடி.. வெளியான அறிவிப்பு!
பிரதமர் மோடிImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 02 Aug 2025 07:06 AM

டெல்லி, ஆகஸ்ட் 02 : 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினவிழா உரையில் (78th Independence Day) இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து யோசனைகளை பகிர்ந்து கொள்ளுமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி (PM Modi) கருத்து கேட்டுள்ளார். நமோ செயலி, MYGOV தளங்களில் மக்கள் தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம் என பிரதமர் மோடி (PM Modi Independence Day Speech) தெரிவித்துள்ளார்இந்தியா தனது 72வது சுதந்தி தினத்தை 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடுகிறது. சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும். அன்றைய நாளில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் கொடியேற்றி கொண்டாடப்படும். குறிப்பாக, தலைநகர் டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாட்டப்படுகிறது. சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, செங்கோட்டையில் கொடி ஏற்றுவார்.

அதோடு, முப்படைகளில் அணிவகுப்பு மரியாதை ஏற்று, நாட்டு மக்களும் அன்றைய நாளில் உரையாற்றுவார். அப்போது, நாடு எதிர்கொள்ளும் பிரச்னைக்ள குறித்தும், நாட்டின் முன்னேற்றம் குறித்து அவர் உரையாற்றுவார். அவ்வப்போது அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். இதன் மூலம் பிரதமர் மோடி 12வது முறையாக சுதந்திர தின உரையை ஆற்ற உள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கி, 12வது முறையாக பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

Also Read : பயங்கரவாதிகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி.. இந்திய இராணுவம் பலம் குறித்து பேசிய பிரதமர் மோடி

நாட்டு மக்களிடம் கருத்து கேட்ட பிரதமர் மோடி


இந்த நிலையில் தான் பிரதமர் மோடி முக்கிய தகவலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது,  அதாவது, தனது சுதந்திர தின உரையில் என்னென்ன கருத்துகள் இருக்க வேண்டும் என்பது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கருத்து கேட்டுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “இந்த ஆண்டு சுதந்திர தினத்தை நெருங்கி வரும் வேளையில், எனது சக இந்தியர்களிடமிருந்து கருத்து கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Also Read : வணக்கம் சோழமண்டலம்.. ராஜராஜ சோழன் நாணயம் வெளியீட்டுக்கு பின் தமிழில் பேசிய பிரதமர் மோடி..!

இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் என்னென்ன கருத்துகள், கருப்பொருள்கள் இடம்பெற வேண்டும் என தனக்கு யோசனைக்கு அளிக்க விரும்புகிறீர்களாMyGov மற்றும் NaMo செயலியில் தனது சுதந்திர தின உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளுங்கள்என குறிப்பிட்டு இருந்தார்.