Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

PM Narendra Modi : 4,078 நாட்கள்.. இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி!

Longest Serving Prime Minister Modi : ஜவஹர்லால் நேருவுக்கு அடுத்தபடியாக மிக நீண்ட காலம் பிரதமர் பதவியில் உள்ளவர் என்ற சாதனை பிரதமர் மோடி பெற்றுள்ளார். 4,078 நாட்கள் பிரதமர் பதவியில் நீடிப்பதன் மூலம், இந்திரா காந்தியின் சாதனையை நரேந்திர மோடி முறியடித்துள்ளார். இந்திய காந்தி பிரதமராக 4,077 நாட்கள் பதவி வகித்தார்.

PM Narendra Modi : 4,078 நாட்கள்.. இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி!
பிரதமர் மோடிImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 25 Jul 2025 12:06 PM

டெல்லி, ஜூலை 25 : இந்தியாவின் நீண்ட நாள் பிரதமராக (India Longest Serving Prime Minister) இருந்த இரண்டாவது நபர் என்ற சாதனையை நரேந்திர மோடி (PM Modi) பெற்றுள்ளார். குறிப்பாக, நீண்ட நாள் பிரதமராக இரண்டாவது நபராக இருந்த இந்திரா காந்தியின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்து சாதனை படைத்துள்ளார். நரேந்திர மோடி, 2025 ஜூலை 25ஆம் தேதியான இன்றுடன் பிரதமராகி 4 ஆயிரத்து 78 நாட்கள் முழுமை அடைந்துள்ளது. நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, இரண்டாவது இடத்தில் பிரதமர் மோடி இருக்கிறார். குஜராத்தின் வத்நகரில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர பற்றாளராக இருந்தார். அதைத் தொடர்ந்து, 1985ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். பாஜகவில் உறுப்பிரனா இருந்த பிரதமர் மோடி, 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார்.

அதைத் தொடர்ந்து, குஜராத்தில் நடந்த 2007, 2012ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தொடர் வெற்றிகளை பெற்றார். 2014ஆம் ஆண்டு அவர் முதல்முறையாக உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மக்களவை தேர்தலில் போட்டி மாபெரும் வெற்றியை பெற்றதோது, நாட்டின் பிரதமராகவும் தனது பொறுப்பை தொடங்கினார். அதைத் தொடர்ந்து, 2019,2024ஆம் ஆண்டுகளில் நடந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்று பிரதமராக மோடி தொடர்ந்தார். எனவே, தற்போது இந்தியாவின் நீண்ட நாள் பிரதமராக இருந்த இரண்டாவது நபர் என்ற சாதனையை நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

வரலாற்றில் பிரதமர்  மோடி

நாட்டின் முதல் பிரதமராக  ஜவஹர்லால் நேரு. இவர் தொடர்ச்சியாக தனது கட்சியை மக்களவை தேர்தலில் வெற்றி பெற வைத்தார். ஜவஹர்லால் நேரு ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரை பிரதமர் பதவியில் இருந்தார். அவரது பதவிக்காலம் 16 ஆண்டுகள், 9 மாதங்கள் மற்றும் 12 நாட்கள் வரை நீடித்தது. கிட்டதட்ட ஜவஹர்லால் நேரு 6,130 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, இந்திரா காந்தி 1966 ஜனவரி 24 முதல் 1977 மார்ச் 24 வரை தொடர்ச்சியாக 4,077 நாட்கள் பிரதமராக இருந்தார். இந்த நிலையில் தான், இந்திரா காந்தியின் சாதனையை பிரதமர்  மோடி முறியடித்துள்ளார்.  இந்தியாவின் நீண்ட நாள் பிரதமராக இருந்த இரண்டாவது நபர் என்ற சாதனையை நரேந்திர மோடி பெற்றுள்ளார்.

இதன் மூலம், பிரதமர்  மோடி,  2025 ஜூலை 25ஆம் தேதியான இன்றுடன் 4,078 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்துள்ளார். மேலும், காங்கிரஸ் அல்லாத கட்சியைச் சேர்ந்த பிரதமராக நீண்ட காலம் பதவி விகித்தவர் நரேந்திர மோடி. சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் மற்றும் ஒரே பிரதமாகவும் மோடி திகழ்கிறார். நேருவை தவிர, தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்ற ஒரே பிரதமர், மோடி ஆவார்.

இந்தி பேசாத மாநிலத்திலிருந்து அதிக காலம் பதவி வகித்த பிரதமர், மோடி ஆவார். இரண்டு முறை பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, பிரதமரான முதல் பிரதமர் மோடி ஆவார். 1971 இல் இந்திரா காந்திக்குப் பிறகு முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்த முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.