PM Modi Release Chola Coin: வணக்கம் சோழமண்டலம்.. ராஜராஜ சோழன் நாணயம் வெளியீட்டுக்கு பின் தமிழில் பேசிய பிரதமர் மோடி..!
Gangaikonda Cholapuram festival: சோழர்களே ஜனநாயகத்தின் முன்னோடிகள், சோழர்களின் ஆட்சியே ஜனநாயகத்தின் தாய். நீர் மேலாண்மையிலும் சோழர்கள் முன்னோடியாக திகழ்ந்தனர். உலகின் கட்டடவியல் அற்புதங்களில் ஒன்று கங்கைகொண்ட சோழபுரம். எனது தொகுதியான காசியில் இருந்து கங்கை நீரை கொண்டு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி பேசினார்.

அரியலூர், ஜூலை 27: கங்கைகொண்ட சோழபுரம் ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மாமன்னர் ராஜேந்திர சோழன் (Raja Raja Cholan) உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டார். புதிய நாணயத்தை வெளியிட்ட பிறகு பிரதமர் மோடி (PM Modi) சிறப்புரையாற்றினார். அப்போது வணக்கம் சோழ மண்டலம் பேசிய பிரதமர் மோடி, “நான் ஒரு விஷயத்தை கவனித்தேன். எப்போதெல்லாம் நயினார் நாகேந்திரன் பெயர் ஒலிக்கிறதோ, அப்போது மக்களாகிய உங்களிடம் உற்சாகம் எழுகிறது. ராஜராஜ சோழனின் இடத்தில் இசை ஞானி இளையராஜாவின் பாடல் சிவ பக்திமயமாக இருந்தது” என்றார்.
ALSO READ: மாலத்தீவின் சுதந்திர தின கொண்டாட்டம்.. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் மோடி..!




சோழர்களை புகழ்ந்த பிரதமர் மோடி:
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “சிவன் தரிசனம், இளையராஜாவின் இசை ஆன்மிக அனுபவமாக இருந்தது. இளையராஜாவின் இசை நிகழ்ச்சி பக்தி நிறைந்ததாக அமைந்தது. என் விருப்பமெல்லாம் சிவனின் நல்லாசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே. இந்த பக்தியமயமான தருணம் என் மனதை ஆனந்தம் அடைய செய்தது. இந்தியாவின் 140 கோடி மக்களுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் இன்று பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது. சிவனின் ஆசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். தமிழ் தொகுப்பில் பகவத்கீதை இசை தொகுப்பை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
கங்கைகொண்ட சோழபுரத்தில் பேசிய பிரதமர் மோடி:
Honoured to be at Gangaikonda Cholapuram Temple for the Aadi Thiruvathirai Festival. https://t.co/r2huJD0dUm
— Narendra Modi (@narendramodi) July 27, 2025
சோழர் கால கலை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது. சோழர்கள் குறித்த கண்காட்சியை கண்டு பிரமித்து போனேன். கங்கைகொண்ட சோழபுரத்தில் கலாச்சார அமைச்சகம் அமைத்துள்ள கண்காட்சியை அனைவரும் பார்க்க வேண்டும். சோழர்களின் பாரம்பரியத்துக்கு அழிவே கிடையாது, சோழர்களின் பாரம்பரியம் நிலையானது. ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் என்ற பெயர்கள் நாட்டின் வரலாறுகள். சோழர் கால ஆட்சி பாரத நாட்டின் பொற்காலங்களில் ஒன்றாக இருந்தது. அன்றைய காலத்திலேயே குடவோலை நடைமுறை வாயிலாக ஜனநாயக முறை தேர்தல்கள் நடந்தன. ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக சோழர் ஆட்சி திகழ்ந்தது. இதன்மூலம், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி முன்னேறி சென்றோம்.
ALSO READ: 4,078 நாட்கள்.. இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த பிரதமர் மோடி!
சோழர்களே ஜனநாயகத்தின் முன்னோடிகள், சோழர்களின் ஆட்சியே ஜனநாயகத்தின் தாய். நீர் மேலாண்மையிலும் சோழர்கள் முன்னோடியாக திகழ்ந்தனர். உலகின் கட்டடவியல் அற்புதங்களில் ஒன்று கங்கைகொண்ட சோழபுரம். எனது தொகுதியான காசியில் இருந்து கங்கை நீரை கொண்டு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சோழர்களின் கருத்துகளை, எண்ணங்களை எமது அரசு முன்னெடுத்து செல்கிறது.” என்றார்.