கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்.. கங்கை நீரில் அபிஷேகம்!
PM Modi In Gangaikonda Cholapuram : பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பிரகதீஸ்வரர், துர்கா, பார்வதி , முருகன் சன்னதிகளில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். மேலும், வாரணாசி கங்கை நீரை எடுத்து வந்து சோழீஸ்வரருக்கு பிரதமர் மோடி அபிஷேகம் செய்தார்.

அரியலூர், ஜூலை 27 : பிரதமர் மோடி (PM Modi Visit Gangaikonda Cholapuram) கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும், கங்கை நீரை எடுத்து வந்து சோழீஸ்வரருக்கு பிரதமர் மோடி அபிஷேகம் செய்தார். இதன் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கங்கைகொண்டை சோழபுரத்திற்கு கங்கை நீதி வந்துள்ளது. பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். 2025 ஜூலை 26ஆம் தேதியான நேற்று தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டு, இரவே திருச்சிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டார். இந்த நிலையில், 2025 ஜூலை 27ஆம் தேதியான இன்று காலை 11 மணியளவில் திருச்சியில் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து பிரதமர் மோடி, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டார்.
திருச்சியில் இருந்து ஹெலிபேட் தளத்திற்கு பிரதமர் மோடி, காரில் சென்றார். அப்போது, காரில் சென்ற பிரதமர் மோடிக்கு, சாலையின் இருபக்கத்திலும் தொண்டர்கள் அவருக்கு பூக்களை தூவி வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு, ஹெலிகாப்டரில் இருந்து அரியலூருக்கு சென்றனர். அங்கிருந்து காரில் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு சென்றார். கங்கை கொண்டசோழபுரத்தில் பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியும் ரோடு ஷோ நடத்தினார். அங்கிருந்த தொண்டர்களுக்கு கைகாட்டி வரவேற்பை ஏற்றார்.
Also Read : பிரதமர் மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி.. முன்வைத்த 3 முக்கிய கோரிக்கைகள்.. என்னென்ன?
சோழபுரத்தில் பிரதமர் மோடி தரிசனம்
#WATCH | Ariyalur, Tamil Nadu: PM Narendra Modi offers prayers at Gangaikonda Cholapuram Temple
PM Modi is participating in the celebration of the birth anniversary of the great Chola emperor Rajendra Chola I with the Aadi Thiruvathirai Festival at Gangaikonda Cholapuram Temple… pic.twitter.com/a88qzFgXZ6
— ANI (@ANI) July 27, 2025
அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பிரகதீஸ்வரர், துர்கா, பார்வதி , முருகன் சன்னதிகளில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். மேலும், கோயில் சிவாச்சார்யார்கள் பிரதமருக்கு மாலை அணிவித்து கோயில் பிரசாதத்தை வழங்கினார்கள். மேலும், வாரணாசி கங்கை நீரை எடுத்து வந்து சோழீஸ்வரருக்கு பிரதமர் மோடி அபிஷேகம் செய்தார்.
Also Read : பிரதமரை சந்திக்க ஓபிஎஸ்-க்கு நேரம் ஒதுக்கீடு?.. வெளியான முக்கிய தகவல்!
இதன் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கங்கைகொண்டை சோழபுரத்திற்கு கங்கை நீதி வந்துள்ளது. கங்கை வரை வெற்றி பெற்று கங்கை நீரை எடுத்து வந்து சோழர்களுக்கு புதிய தலைநகராக கங்கைகொண்ட சோழபுரத்தை அமைத்தார் மாமன்னர் ராஜேந்திர சோழன் என்பது வரலாற்றில் உள்ளது. அதைப் போற்றும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போது கங்கை நீரை எடுத்து வந்தார். பிரதமர் எடுத்து வந்த கங்கை நீரை கொண்டு பிரகதீஸ்வருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்தது.