Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்.. ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த அஜித் தோவல்.. முக்கிய மீட்டிங்!

Ajit Doval Meets Russia President Putin : மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதைத் தொடர்ந்து, இந்தியா பொருட்கள் மீது அமெரிக்க 50 சதவீத வரி விதித்த நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.

அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்.. ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த அஜித் தோவல்.. முக்கிய மீட்டிங்!
அஜித் தோவல் - அதிபர் புதின்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 08 Aug 2025 07:01 AM

மாஸ்கே, ஆகஸ்ட் 08 : தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval) ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை (Russia President Vladimir Putin)  சந்தித்துள்ளார். அமெரிக்கா இந்தியா இடையே வரி பதட்டங்களுக்கு மத்தியில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. இது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தியா அமெரிக்கா இடையே வணிக ரீதியான பதட்டங்கள் நிலவி வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்தே, பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாள் நாட்களுக்கு முன்பு இந்தியா பொருட்கள் மீது 25 சதவீதம் வரியை டிரம்ப் விதித்தார். அதைத்தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதி மேலும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் என மொத்தமாக 50 சதவீதம் வரியை விதித்திருந்தார்.

இது பெரும் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது. டிரம்பின் நடவடிக்கைக்கு சீனா, ரஷ்யா எதிர்ப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்த வரி விதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். அதோடு இல்லாமல் ரஷ்யாவிடம் பெற்ற கச்சா எண்ணெயை பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு விற்பனை செய்து வருவதால் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரியை படிப்படியாக உயர்த்துள்ளதாகவும் அவர் கூறினார். அதோடு இல்லாமல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் கிடைக்கும் எதிரான போரில் ரஷ்யா பயன்படுத்துகிறது என்பதை டிரம்பின் முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது.

Also Read : இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்!

ரஷ்யா அதிபர் புதினை சந்தித்த அஜித் தோவல்


இப்படி இரு நாடுகளுக்கு வணிக ரீதியான நடந்து வருகிறது. ட்ரம்பின் வரி விதிப்பு நியாயமற்றது என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு இல்லாமல் நான் தனது பொருளாதாரத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் எனவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இப்படியனோ சூழலில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆட்சித் தோவல் 2025 ஆகஸ்ட் 6ஆம் தேதி மாஸ்கோ புறப்பட்டு சென்றார்.

அங்க முக்கிய அதிகாரிகளை சந்தித்து இரு நாட்களின் உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து 2025 ஆகஸ்ட் 7 ஆம் தேதியான நேற்று ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை, அஜித் தோவல் சந்தித்து பேசி உள்ளார்.  ரஷ்யா அதிபர் புதினுடன் அஜித் தோவல் இருதரப்பு பேச்சு வார்த்தையில் நடத்தினார்.

Also Read : 24 மணி நேரத்தில் இந்தியாவின் வரி மேலும் உயரும் – எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

குறிப்பாக பாதுகாப்பு, பொருளாதாரம், எரிசக்தி ஒற்றுமை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதுக்கு முன்னதாக அஜித் அவர்கள் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்ஜி ஷோய்குவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கிடையில், 2025ஆம் ஆண்டு இறுதியில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு வருகை  தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.