Donald Trump : இந்தியா மீது 50% வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. முழு விவரம்!
Donald Trump Tariff : இந்தியா மீது கூடுதலாக 25% இறக்குமதி வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கையெழுத்திட்டார். இந்த புதிய வரி மூன்று வாரங்களுக்குப் பிறகு அமலுக்கு வரும், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 25% வரியுடன் கூடுதலாக சேர்க்கப்படும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2025, ஆகஸ்ட் 06ம் தேதியான இன்று இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரியை விதிக்கப்போவதாக அறிவித்தார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி டிரம்ப் இந்தியா மீது மிகப்பெரிய வரியை விதித்துள்ளார். முன்னதாக, 2025, ஆகஸ்ட் 30 அன்று 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இப்போது இந்தியாவின் மீதான அமெரிக்காவின் மொத்த வரி 50 சதவீதமாக மாறியுள்ளது. இந்த வரி இந்த மாதம் ஆகஸ்ட் 27 முதல் பொருந்தும். 24 மணி நேரத்திற்கு முன்பு, டொனால்ட் டிரம்ப் இந்தியா மீதான வரியை அதிகரிப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.




எஃகு, அலுமினியம் மற்றும் மருந்து போன்ற துறை வாரியான வரிக்கு உட்பட்ட பொருட்களுக்கு இந்த உத்தரவு விலக்கு அளிக்கப்படுகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து டிரம்ப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பது அவசியம் மற்றும் பொருத்தமானது என்று டிரம்ப் உத்தரவில் கூறியுள்ளார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது விதிக்கப்படும் 25% வரியை கணிசமாக அதிகரிப்பதாக டிரம்ப் எச்சரித்த ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Also Read : ரஷ்யா நோக்கி இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப உத்தரவு.. அதிபர் டிரம்ப் அதிரடி..
ட்ரம்ப் அறிவிப்பு
US President Donald Trump imposes an additional 25% tariff on India over Russian oil purchases
On July 30, Trump had announced 25% tariffs on India. pic.twitter.com/NHUc9oh0JY
— ANI (@ANI) August 6, 2025
முன்னதாக, CNBCக்கு அளித்த பேட்டியில் டிரம்ப், இந்தியா ஒரு நல்ல வர்த்தக கூட்டாளியாக இல்லை, ஏனென்றால் அவர்கள் எங்களுடன் நிறைய வணிகம் செய்கிறார்கள், ஆனால் நாங்கள் அவர்களுடன் அதைச் செய்வதில்லை என்று கூறியிருந்தார். நாங்கள் 25% வரியை முடிவு செய்திருந்தோம், ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் அதை நிறைய அதிகரிப்பேன் என்று நினைக்கிறேன். உலகிலேயே இந்தியா அதிக வரிகளை விதிக்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.
Also Read : கின்னஸ் சாதனை படைத்த வெறும் 21 வாரங்களில் பிறந்த ஆண் குழந்தை
இந்தியாவின் பதில்
அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவை நியாயமற்ற முறையில் ‘குறிவைத்ததாக’ இந்தியா குற்றம் சாட்டியது, அதே நேரத்தில் அவர்களே ரஷ்யாவிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்கின்றனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை நியாயமற்றது மற்றும் பகுத்தறிவற்றது என்று வெளியுறவு அமைச்சகம் விவரித்துள்ளது. எந்தவொரு பெரிய நாட்டையும் போலவே, இந்தியாவும் தனது தேசிய நலன்களையும் பொருளாதார பாதுகாப்பையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அமைச்சகம் கூறியது.