Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Donald Trump : பிரிக்ஸ் கூட்டமைப்பு விரைவில் மறைந்து போகும்.. டொனால்ட் டிரம்ப் கருத்து!

Donald Trump of BRICS | பிரிக்ஸ் கூட்டமைப்பு மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன் வைத்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், விரைவில் பிரிக்ஸ் கூட்டமைப்பு மறைந்து போகும் என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து டிரம்ப் கூறியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Donald Trump : பிரிக்ஸ் கூட்டமைப்பு விரைவில் மறைந்து போகும்.. டொனால்ட் டிரம்ப் கருத்து!
டொனால்ட் டிரம்ப்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 20 Jul 2025 08:11 AM

அமெரிக்கா, ஜூலை 20 : பிரிக்ஸ் (BRICS – Brazil, Russia, India, China and South Africa) கூட்டமைப்பு விரைவில் மறைந்துப்போகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பம் முதலே பிரிக்ஸ் கூட்டமைப்பின் மீது டொனால்ட் டிரம்ப் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், தற்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதுமட்டுமன்றி, பிரிக்ஸ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், பிரிக்ஸ் கூட்டமைப்பு குறித்து டிரம்ப் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிரிக்ஸ் கூட்டமைப்பு குறித்து குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன் வைக்கும் டிரம்ப்

2024 நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து அவர் அதிபராகவும் பதவி ஏற்றார். அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டிரம்ப் அங்கு பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அமெரிக்காவில் மட்டுமன்றி, உலக நாடுகளுகளுக்கும் அவர் அதிரடி காட்டி வருகிறார். சமீபத்தில் சில உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த இறக்குமதி வரி உலக நாடுகள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின.

இதையும் படிங்க : உலகின் பழமையான நாடு எது? – இந்தியா, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா அல்ல… ஆச்சரியப்படுத்தும் புதிய நாடு எது?

இவ்வாறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்வது மட்டுமன்றி, கருத்து சொல்வதிலும் டிரம்ப் தயங்குவதில்லை. அவர் தனக்கு தோன்றும் கருத்துக்களை மிகவும் வெளிப்படையாக பேசி வருகிறார். அந்த வகையில் இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில், தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பை தொடர்ந்து விமர்சனம் செய்தும் அதன் மீது பல குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார். அந்த வகையில், பிரிக்ஸ் கூட்டமைப்பு குறித்து டிரம்ப் தற்போது கூறியுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பு விரைவில் மறைந்து போகும் – டொனால்ட் டிரம்ப்

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது, பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை குறைத்து மதிப்பீடு செய்ய முயற்சி செய்கிறது. எங்களுடன் விளையாட யாரையும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பிரிக்ஸ் அமைப்புக்கு ஒரு கடுமையான பொருளாதார சவாலை எதிர்கொள்ளும் ஒற்றுமை இல்லை. பிரிக்ஸ் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும். விரைவில் பிரிக்ஸ் அமைப்பு மங்கி மறைந்து போகும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.