Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Reciprocal Tariff : உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி.. அமலுக்கு வரும் காலத்தை நீட்டித்த அமெரிக்க அரசு.. எப்போது வரை?

US Delays Reciprocal Tariffs | 2025 ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டிரம்ப் அங்கு பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பதாக அவர் அறிவித்திருந்த நிலையில், அது அமல்படுத்தப்படும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Reciprocal Tariff : உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி.. அமலுக்கு வரும் காலத்தை நீட்டித்த அமெரிக்க அரசு.. எப்போது வரை?
டொனால்ட் டிரம்ப்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Jul 2025 07:17 AM

அமெரிக்கா, ஜூலை 08 : இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பு (Reciprocal Tariff) அமலுக்கு வரும் கால அவகாசத்தை அமெரிக்க அரசு (America Government) நீட்டித்துள்ளது. உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) பரஸ்பர வரி விதிப்பை அறிவித்த நிலையில், அது உலக நாடுகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த வரி விதிப்பு குறித்து ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உலக நாடுகள் மீது பரஸ்பர வரியை அறிவித்த டொனால்ட் டிரம்ப்

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2025 ஜனவரி மாதத்தில் அவர் அதிபராக பதவி ஏற்றார். பதவியேற்று முதல் அமெரிக்காவில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். சட்ட விரோத குடியேறிகள் வெளியேற்றம் உள்ளிட்ட சில முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்திருந்தார். அதாவது அமெரிக்காவின் பொருட்களை இறக்குமதி செய்ய உலக நாடுகள் எவ்வளவு சதவீதம் வரி விதிக்கின்றதோ அதே அளவு இனி அமெரிக்காவும் வரி விதிக்கும் என்று கூறியிருந்தார்.

இரண்டாவது முறையாக வரி அமலை தள்ளி வைத்த அமெரிக்கா

இதற்கு இடையே இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் மீதான பரஸ்பர இறக்குமதி வரியை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். இந்த தற்காலிக வரி அமல் நிறுத்தம் நாளையுடன் (ஜூலை 09, 2025) முடிவடைய உள்ளது. இதன் காரணமாக ஜூலை 9 ஆம் தேதிக்கு பிறகு பரஸ்பர விதி அமல்படுத்தப்படும் என தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீதான இறக்குமதி வரி விதிப்பு அமலாகும் கால அவகாசத்தை அமெரிக்க அரசு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.