கின்னஸ் சாதனை படைத்த வெறும் 21 வாரங்களில் பிறந்த ஆண் குழந்தை!
World's Most Premature Baby Survives | அமெரிக்காவின் அயோவா பகுதியில் வெறும் 21 வாரங்களில் பிறந்த ஆண் குழந்தை ஒன்று கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் பிறந்த அந்த குழந்தை தற்போது நலமுடன் உள்ள நிலையில், உலகின் மிகவும் குறைந்த வாரத்தில் பிறந்த குழந்தை என்ற சாதனை படைத்துள்ளது.

அமெரிக்கா, ஜுலை 27 : அமெரிக்காவில் (America) வெறும் 21 வாரத்திலே பிறந்த ஆண் குழந்தை ஒன்று உலகின் மிகவும் குறைந்த வாரத்தில் பிறந்த குழந்தை (Most Premature Baby Ever) என்ற கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. மிகவும் ஆபத்தான முறையில் பிறந்த இந்த குழந்தை மருத்துவர்களின் உதவியுடன் இன்று நளமுடன் உள்ளது. இதுவரை உலகில் இவ்வளவு குறுகிய காலத்தில் பிறந்த குழந்தைகள் உயிர் பிழைக்காத நிலையில், இந்த குழந்தை ஒரு அதிசயமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கின்னஸ் சாதனை படைந்த அந்த குழந்தை குறித்து விரிவாக பார்க்கலாம்.
வெறும் 21 வாரங்களிலேயே பிறந்த ஆண் குழந்தை – உலக சாதனை படைத்துள்ளது
அமெரிக்காவில் அயோவா நகரில் பிறந்தது தான் நாஷ் கீன் என்ற ஆண் குழந்தை. இந்த குழந்தை மற்ற குழந்தைகளை விட மிகவும் வித்தியாசமான குழந்தையாக கருதப்படுகிறது. காரணம் இந்த குழந்தை வெறும் 21 வாரங்களிலேயே பிறந்துள்ளது. ஒரு முழு வளர்ச்சி அடைந்த ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டும் என்றால் அதற்கு குறைந்தது 40 வாரங்கள் தேவைப்படும். அவ்வாறு 40 வாரங்களுக்கு முன்னதாக குழந்தை பிறக்கும் குழந்தைகள், முழுமையான வளர்ச்சி அடையாமல் இருக்கும். இதன் காரணமாக குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்களுடம் அரங்கேறியுள்ளன.
இதையும் படிங்க : கர்ப்பமாக இருப்பது தெரிந்த 17 மணி நேரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண்.. ஷாக் சம்பவம்!




பிரசவத்திற்கு 133 நாட்களுக்கு முன்னதாகவே பிறந்த நாஷ் கீன்
அமெரிக்காவின் அயோவா நகரில் ஜுலை 5, 2025 அன்று நாஷ் கீன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிரசவத்திற்கு 133 நாட்களுக்கு முன்னதாகவே பிறந்துள்ளது. இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்னாதாக பிறக்கும் குழந்தைகளே தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிரிழந்த சம்பவங்கள் உள்ள நிலையில், இந்த குழந்தை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 21 வாரங்களில் முழுமையாக வளர்ச்சி அடையாத இந்த குழந்தையை அயோவா பல்கலைக்கழக ஸ்டீட் குடும்ப குழந்தைகள் மருத்துவமனையில் பிறந்த நிலையில், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் சுமார் 6 மாதங்கள் வைத்து சிகிச்சை பெற்று வந்தது. 6 மாத சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் உடல்நலம் முன்னேறிய நிலையில், பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஆண்மை நீக்கம், ஆயுள் தண்டனை.. 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு கடுமையான தண்டனை!
தற்போது இந்த குழந்தை மற்ற குழந்தைகளை போல இயல்பாக உள்ள நிலையில், தனது ஒரு வயதில் உலகின் மிகவும் குறைந்த வாரத்தில் பிறந்த குழந்தை என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது. நாஷ் கீனின் இந்த கதை பலரையும் ஆச்சர்யம் அடைய செய்துள்ளது.