உயிருடன் இருக்கும் தாயை சவப்பெட்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்ற மகன்.. சீனாவில் விநோத சம்பவம்!
China's Viral Funeral Procession | உயிரிழந்த நபர்களை சவப்பெட்டியில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்லும் நிலையில், சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் உயிருடன் இருக்கும் தனது தாயை சவப்பெட்டியில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார். இந்த விவகாரம் இணையத்தில் பேசுபொருளாக மாறிய நிலையில், தாயின் நீண்ட ஆயுளை கோரி அவர் சீனாவின் பாரம்பரிய வழக்கத்தை மேற்கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சீனா, ஜூலை 12 : சீனாவில் (China) உயிருடன் இருக்கும் தனது தாயை அவரது மகன் சவப்பெட்டியில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தின் தகவல் இணையத்தில் வெளியான நிலையில், அது மிக வேகமாக வைரலாகி வருகிறது. உயிருடன் இருக்கும் தாயை சவப்பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றதால் அந்த நபருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், உண்மையில் உயிருடன் இருக்கும் நபர்களை சவப்பெட்டியில் வைத்து எடுத்துச் செல்வது நீண்ட ஆயுளை வழங்கும் என்ற நம்பிக்கை சீனாவில் உள்ளது. இதன் காரணமாகவே அந்த நபர் தனது தாயை சவப்பெட்டியில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார்.
பேசுபொருளாக மாறிய சீனாவின் பாரம்பரிய சடங்கு
மரணம் என்பது அனைவருக்கும் பொதுவானது. உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதரும் கட்டாயம் இறக்க வேண்டும் என்பதுதான் இயற்கையின் விதியாக உள்ளது. இந்த நிலையில், மரணத்தை தடுக்க முடியாது என்பதை உணர்ந்த பொதுமக்கள் அதனை சற்று தள்ளி போடுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வர். நீண்ட ஆயுள் வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜைகள் செய்வது, சடங்குகள் செய்வதையும் பலர் வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு சீனாவில் நீண்ட ஆயுளை வேண்டி காலம் காலமாக மேற்கொள்ளப்படும் சடங்கு ஒன்று தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க : ஏமனில் ஜூலை 16ல் மரண தண்டனை.. நிமிஷா பிரியாவை காப்பாற்ற முடியுமா? கடைசி வாய்ப்பு!




உயிருடன் இருக்கும் தாயை சவப்பெட்டியில் வைத்து அழைத்துச் சென்ற மகன்
உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் வித்தியாசமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பின்பற்றப்படும். அந்த வகையில், ஒவ்வொரு நாடுகளிலும் தனித்துவமான சடங்குகளும் பின்பற்றப்படும். இந்த நிலையில், சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது தாயின் ஆயுளை நீட்டிப்பதற்காக பாரம்பரிய சடங்கை செய்தது தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அதாவது, சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது தாய்க்கு சவப்பெட்டி ஒன்றை வாங்கி வந்துள்ளார். அந்த சவப்பெட்டியில் தனது 70 வயது தாயை அமர வைத்து அவர் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார். பொதுவாக இறந்தவர்களை சவப்பெட்டியில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்லும் நிலையில், இந்த நபர் உயிருடன் இருக்கும் தனது தாய்க்கு அதனை செய்துள்ளார். இது பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், கேள்விகளையிம் எழுப்பியுள்ளது.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அந்த நபர் தனது தாய் நீண்ட ஆயுளை பெற வேண்டும் என்பதற்காக இதனை செய்துள்ளார். அதாவது, உயிருடன் இருக்கும் நபரை சவப்பெட்டியில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றால் அந்த நபருக்கு அது அமைதியையும், செல்வத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுக்கும் என சீனர்கள் நம்புகின்றனர். இதன் காரணமாகவே அவர் இந்த செயலை செய்துள்ளார்.
16 பேர் சவப்பெட்டியை சுமக்க மேல, தாளங்களுடன் அவர் தனது தாய்க்கு ஊர்வலம் நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.