Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஏமனில் ஜூலை 16ல் மரண தண்டனை.. நிமிஷா பிரியாவை காப்பாற்ற முடியுமா? கடைசி வாய்ப்பு!

Kerala Nurse Nimisha Priya Execution : கேரளாவைச் சேர்ந்த செவிலியருக்கு 2025 ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாகவே கொலை வழக்கு ஒன்றில் ஏமன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இருப்பினும், இவரை காப்பாற்ற வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது என்வென்று பார்ப்போம்.

ஏமனில் ஜூலை 16ல் மரண தண்டனை.. நிமிஷா பிரியாவை காப்பாற்ற முடியுமா? கடைசி வாய்ப்பு!
நிமிஷா பிரியா
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 09 Jul 2025 17:02 PM

கேரளா, ஜூலை 09 : இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு (Nimisha Priya Case) 2025 ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை (Nimisha Priya Execution) நிறைவேற்றப்பட உள்ளது. ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்து மாஹதி என்பவரைக் கொலை செய்த வழக்கல் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. ஆனால், நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய அவரது குடும்பத்தினர் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மரண தண்டனையில் இருந்து நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு பெற்றுத் தர ஏமன் அரசு அதிகாரிகள், மாஹதி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சமூக ஆர்வலர் சாமுவேல் ஜெரோம் பாஸ்கரன் இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். நிமிஷா பிரியாவின் உயிரை காப்பாற்ற மாஹதி குடும்பத்தினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இழப்பீட்டு தொகையை வழங்கவும் முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எங்களுக்கு இருக்கும் ஒரே வழி இதுதான். தலால் அப்து மாஹதி குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை கொடுக்க முன்வந்துள்ளோம். இதனை அந்த குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டார் நிமிஷா பிரியாவுக்கு மரணம் இருக்காது. மாஹதி குடும்பத்தினருக்கு ஒரு மில்லியன் டாலர் வழங்க நிமிஷா குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

நிமிஷாவின் மரண தண்டனை நிறுத்த முடியுமா?

மாஹதி குடும்பத்தினருக்கு கேரளாவில் இலவசமாக சிகிச்சை அளிக்கவும், அதற்காக செலவுகளையும் நிமிஷா குடும்பத்தினர் ஏற்க முன்வந்துள்ளனர். மேலும், மாஹதி சகோதரர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது சவுதி அரேபியாவில் குடியேற முடிவு செய்தால், அதற்கான செலவையும் ஏற்க முன்வந்துள்ளோம்.

ஆனால், இதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. இந்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்” என கூறினார். எனவே, இழப்பீட்டு தொகையை மாஹதி குடும்பத்தினர் ஏற்கும் பட்சத்தில், நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை இருக்காது என சொல்லப்படுகிறது. ஏமனின் ஷரியா சட்டம் மூலம் நிமிஷா பிரியா மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்பட முடியும்.

Also Read : எரிமலையில் தவறி விழுந்த இளம் பெண்.. 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு!

பின்னணி என்ன?

2008 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடான ஏமனுக்கு நிமிஷா பிரியா சென்றார். இவர் கேரளா மாவட்டம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் ஏமனில் பல மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், சொந்தமாக கிளினிக் ஒன்றையும் தொடங்கினார். இதற்காக ​​நிமிஷா 2014 இல் தலால் அப்த மாஹதியுடன் தொடர்பு கொண்டார்.

ஒரு தொழிலைத் தொடங்க நிமிஷா மாஹதியுடன் தொடர்பு கொள்வது முக்கியம். ஏனெனில் ஏமனில் உள்ள விதிகளின்படி, ஒரு தொழிலைத் தொடங்க உள்ளூர் நபருடன் கூட்டாளராக இருப்பது கட்டாயமாகும். இதனை அடுத்து, மாஹதியுடன் கிளிக்கை நிமிஷா தொடங்கினார்.

பின்னர், நிமிஷாவின் பாஸ்போர்ட், விசா, கிளினிக்கின் வருமானம் போன்றவற்றை பறித்துக் கொண்டு மாஹதி கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. 2017ஆம் ஆண்டு மாஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து, தனது பாஸ்போர்ட்டை மீட்க முயன்றபோது, அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால், மாஹதி உயிரிழந்தார்.

Also Read : இந்தியர்களுக்கு Visa On Arrival-ஐ விரிவுப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம்.. மேலும் 6 நாடுகள் பட்டியலில் இணைப்பு!

இதனை அடுத்து, நிமிஷா மீது வழக்குப்பதிவு செய்து 2017ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த ஏமன் நீதிமன்றம், அவருக்கு 2018ல் மரண தண்டனை விதித்தது. இதனை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் 2023ல் உறுதி செய்தது. 2024ஆம் ஆண்டு ஏமன் ஜனாதிபதி மரண தண்டனையை உறுதி செய்தார். தொடர்ந்து, மஹதி குடும்பத்தினருடனான பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாத நிலையில், மரண தண்டனை தேதி உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.